Whatsapp குரூப் அட்மின்களுக்கு டபுளாக அள்ளிக் கொடுத்த மெட்டா!
- Get link
- X
- Other Apps
WhatsApp Update | இனி வாட்ஸ்அப் குழுவில் உள்ள அட்மின்கள் இனி தங்களது குழுவில் 512 உறுப்பினர்கள் வரை சேர்த்துக்கொள்ளலாம்.
2014ம் ஆண்டு ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவால் கையகப்படுத்தப்பட்டதில் இருந்தே ‘வாட்ஸ்அப்’ பல்வேறு வகையிலும் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. சாட்டிங், வீடியோ கால், வாய்ஸ் கால், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை பகிர்ந்து கொள்வது போன்ற பல்வேறு தகவல் பரிமாற்றத்திற்கான முக்கிய செயலியாக வாட்ஸ்அப் உள்ளது.
உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்திவரும் நிலையில், அடுத்தடுத்த அப்டேட்கள் மூலம் தன்னுடைய சேவையை வாட்ஸ்அப் மேம்படுத்தி வருகிறது. கடந்த மாதம் கூட வாட்ஸ்அப் காலில் 30 பேர் வரை இணைத்து பேசக்கூடிய வசதி, குழு அட்மின்களுக்கு குழுவில் பகிரப்படும் எந்த ஒரு செய்தியையும் நீக்கும் சிறப்பு அதிகாரம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டன. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போல் மெசேஜ்களுக்கு இமோஜிக்கள் மூலமாக எதிர்வினை ஆற்றும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யூஸர்கள் மெசெஜ்களுக்கு எதிர்வினை ஆற்றும் விதமாக ஹார்ட், ஸ்மைலி போன்ற ஈமோஜிக்களை பயன்படுத்தலாம்.
தற்போது மீண்டும் வாட்ஸ்அப் புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. அதில் இனி வாட்ஸ்அப் குரூப்பில் இணைக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை டபுளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பீட்டா யூஸர்களுக்கு மட்டுமே கிடைத்த நிலையில் தற்போது இது அனைவருக்குமானதாக மாற்றப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் குழுவில் உள்ள அட்மின்கள் இனி தங்களது குழுவில் 512 உறுப்பினர்கள் வரை சேர்த்துக்கொள்ளலாம். இதற்கு முன்னதாக 256 உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment