நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பீட்ரூட்டை இப்படியெல்லாம் சமைத்து சாப்பிடுங்கள்.. அறிவாற்றலுக்கு பஞ்சமே இருக்காது!

 ஆப்பிள், பீட்ரூட், கேரட் போன்றவற்றை ஜூஸாக குடித்தால் சரும பாதுகாப்புக்கு நல்லது, இதயத்திற்கு பலம் சேர்க்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

அதேபோல இந்த ABC வகை ஜூஸை தனித்தனியாக குடித்தாலும், ஒன்றாக சேர்த்து அரைத்து குடித்தாலும் உடலுக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன.

ஆனால் பீட்ரூட்டை மட்டுமே தனியாக தினந்தோறும் உணவில் எடுத்துக் கொள்ள எல்லாரும் தயங்குவர். ஏனெனில் பீட்ரூட்டை தனியே சாப்பிட பெரும்பாலானோர் விரும்புவதும் இல்லை.

இப்படி இருக்கையிள் பீட்ரூட்டை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் முக்கியமான பலனை பெறமுடியும் என்றுக்கூறினால் அதனை நம்ப முடிகிறதா? ஆம். பீட்ரூட்டை தொடர்ந்து உணவாக உண்டு வந்தால் மூளையின் செயல்பாடுகள் அதிகப்படுத்துமாம்.

வயதுக்கு ஏற்ப நமது மன மற்றும் அறிவாற்றலின் செயல்பாடு இயற்கையாக குறைகிறது. இதனை சீர்செய்ய பீட்ரூட்டை உணவில் எடுத்துக்கொண்டால் பலன் கிட்டும். ஏனெனில் பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்ஸ் மூளை செயல்பாட்டுக்கான ரத்த நாளங்களை விரிவாக்கம் செய்ய உதவுகிறது என பிபிசியின் மூத்த செய்தியாளரும், மருத்துவருமான மைக்கேல் மொஸ்லே கூறியிருக்கிறார்.

ஆகவே எந்தெந்த வகைகளில் பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதை காண்போம்:|

1. பீட்ரூட் சாலட்:

பொதுவாக காய்கறிகளை வேகவைத்துதான் உண்ண வேண்டும் என்று எந்த கட்டாயமும் இருக்கவில்லை. அதன்படி பீட்ரூட்டை மிளகு, உப்பு மற்றும் இன்னபிற காய்கறிகளை சேர்த்தும் உண்ணலாம்.

2. பீட்ரூட் பராத்தா:

ஆலு பராத்தாவை போன்று பீட்ரூட்டால் செய்யப்பட்ட மசாலாவை சேர்த்து பராத்தாவாக செய்து அதற்கு சைட் டிஷ்ஷாக தயிரோ அல்லது ஊறுகாயை தொட்டு சாப்பிடலாம். பீட்ரூட் இனிப்பு சுவைக் கொண்ட காய்கறி என்பதால் இந்த சைட் டிஷ்ஷே பொருந்தும்.


3. பீட்ரூட் ஜூஸ்:

பீட்ரூட்டை சாலடாக செய்து சாப்பிட பிடிக்காமல் போனால் அதனை கொண்டு பழச்சாறாக குடிக்கலாம். அதில் சுவைக்கேற்ப கேரட் ஆப்பிள் போன்ற பழங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

4. பீட்ரூட் அல்வா:

மேற்குறிப்பிட்டவற்றை விட இதை அனைவருமே முயற்சிப்பர் என்பதில் ஐயப்பாடில்லை. ஏனெனில் இனிப்பு பண்டமாக இருப்பதில் இதனை பிடிக்காது என முகம் சுழிப்பது குறைவாகவே இருக்கும்.

பீட்ரூட் அல்வா செய்ய துருவிய பீட்ரூட், பால், சர்க்கரை, ஏலக்காய் மற்றும் உலர் திராட்சைகள் ஆகியவையே தேவைப்படும் பொருட்களாகும்.

எனவே, உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க பீட்ரூட் மட்டுமல்லாமல் மருத்துவர்களின் அறிவுரைப்படி தவறாது டயட்டை பராமரித்து நோய் நொடியில்லாமல் வாழ பயணப்படுவோம்.





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!