நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகின் மிக அழகான முகம் உடையவர்களாக ஆம்பர் ஹெர்ட், ராபர்ட் பாட்டின்சன் தேர்வு..!!

ஆம்பர் ஹெர்ட் உலகிலே மிக அழகான முகம் உடைய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகை ஆம்பர் ஹெர்ட். இவர் தனது முன்னாள் கணவர் ஜானி டெப் மீது அவதூறு வழக்கு தொடர்ந்ததன் மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்றார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இவர்களின் வழக்கில் கடந்த 2-ம் தேதி தீர்ப்பு வெளியானது. அதில், ஜானி டெப் நிரபராதி எனவும், ஆம்பர் ஹேர்ட் தொடர்ந்த வழக்குகள் ஆதாரமற்றவை என கூறி கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது. 

இந்த நிலையில் 'பிஎச்ஐ' என்ற முக மேப்பிங் நுட்பத்தின் மூலம் உலகிலே மிக அழகான முகம் உடைய பெண் என்ற பெருமையை ஆம்பர் ஹெர்ட் பெற்றுள்ளார். 'தி பேட்மேன்' நடிகர் ராபர்ட் பாட்டின்சன் உலகின் மிக அழகான ஆண் என்ற பெருமையை பெற்றுள்ளார். லண்டனில் உள்ள மேம்பட்ட முக அழகுசாதன மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மையத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ஜூலியன் டி சில்வா. 

இவர் பிஎச்ஐ-ப் பயன்படுத்தி நடத்திய ஆய்வில் ஆம்பர் ஹெர்ட்-யின் முகம் கிரேக்க கோல்டன் ரேஷியோவுடன் 91.85 சதவீதம் துல்லியமாக இருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நுட்பத்தைப் பயன்படுத்தி டாக்டர் சில்வா 92.15 சதவீத துல்லியத்துடன் உலகின் மிக அழகான மனிதர் ராபர்ட் பாட்டின்சன் என கண்டறிந்துள்ளார்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்