நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இதுதான் யூடியூபில் அப்லோடு ஆன முதல் வீடியோ!

 சமூக வலைதளங்களில் முக்கியமான அங்கமாக விளங்கக் கூடியது யூடியூப். அதில் தற்போது வீடியோக்கள், ஷார்ட்ஸ் என அனைத்தையும் பதிவிட்டு அதன் மூலம் பிரபலமாவதோடு, தனிமனித வருமானத்தையும் பெருக்கிக் கொள்ளும் அளவுக்கு யூடியூபால் உலகம் முழுவதும் பலரும் பயனடைந்து வருகிறார்கள்.


ஆம், 17 ஆண்டுகளுக்கு முன்பு 2005ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி அமெரிக்காவின் Steve Chen, Chad Hurley, and Jawed Karim ஆகியோரால் தொடங்கப்பட்டதுதான் யூடியூப். கூகுள் தேடுபொறிக்கு பிறகு யூடியூபைதான் வியூவர்ஸ்கள் விசிட்டிங் பாயிண்டாக தற்போதும் இருந்து வருகிறது.

அந்த வகையில் என்னதான் பல ஓடிடி தளங்கள் மக்களிடையே பரிட்சயமானாலும் பாடல்கள், படங்கள் கேட்கவும், பார்க்கவும் அனைவரும் நாடுவது என்னவோ யூடியூப் தளத்தைதான். அப்படியான யூடியூபில் முதல் முறையாக பதிவேற்றப்பட்ட வீடியோ எது தெரியுமா?

அதனை யூடியூப் நிறுவனமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு நெட்டிசன்களின் நாஸ்டால்ஜியாவை தூண்டியிருக்கிறது.


அதில், யூடியூபின் இணை நிறுவனரான Jawed Karim கலிஃபோர்னியாவில் உள்ள San Diego Zoo-ல் இருந்து யானைகளின் முன்பு நின்றபடி 19 நொடிகள் அவர் பேசிய ஷார்ட் காணொலிதான் யூடியூபின் முதல் வீடியோ.

இப்போதை நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் 2K, 4K HDல் வீடியோக்கள் பார்க்கப்பட்டாலும் வெறும் 240p ரிசொல்யூஷனில் இருந்த யூடியூபின் முதல் வீடியோவை இதுவரையில் 235 மில்லியன் அதாவது 23 கோடியே 51 லட்சத்து 84 ஆயிரத்து 289 பேரால் பார்க்கப்பட்டும், 1 கோடியே 11 லட்சத்து 95 ஆயிரத்து 890 பேரால் கமெண்ட்டும் செய்யப்பட்டிருக்கிறது. 

இன்ஸ்டாவில் அந்த முதல் வீடியோவை யூடியூப் பகிர்ந்ததில் இருந்து நெட்டிசன்கள் பலரும் யூடியூப் உடனான தங்களது நினைவலைகளை பகிர்ந்து வருகிறார்கள்.



ALSO READ : Whatsapp குரூப் அட்மின்களுக்கு டபுளாக அள்ளிக் கொடுத்த மெட்டா!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்