நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஜப்பானீஸ், கொரியன் மக்களின் சரும அழகிற்கு காரணம் இதுதான். ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் அவ்வளவு அழகையும் மொத்தமாக பெற இந்த ஒரு குறிப்பு போதும்.

பொதுவாகவே ஜப்பான் மக்களும் கொரியன் மக்களும் பார்ப்பதற்கு வெள்ளையாக அழகாக இளமையான தோற்றத்தில் இருப்பார்கள்.
வயதான தோற்றத்தை தள்ளிப்போட அவர்கள் பயன்படுத்தும் பல வழிகளில் இதுவும் ஒன்று. இந்த ஃபேஸ் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கம் படிப்படியாக குறையும். சுருக்கம் வருவதை தள்ளிப் போடுவதற்கு இந்த ஃபேஸ் பேக் மிகவும் நல்லது. சுலபமான இந்த ஃபேஸ் பேக்கை தயார் செய்வது எப்படி.
இந்த பேக்கை தயார் செய்வதற்கு நிறைய காசு கொடுத்து கடையில் இருந்து பொருட்களை வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. 10 ரூபாய்க்கு பீட்ரூட், 2 ஸ்பூன் அரிசி போதும். முதலில் 2 டேபிள்ஸ்பூன் அரிசியை கொஞ்சம் நிறைய தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து அல்லது ஒரு பாத்திரத்தில் வைத்து நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள்‌. அரிசி நன்றாக வெந்த பிறகு சாதத்தை வடிகட்டி, கஞ்சி தண்ணீரை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அரிசியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த அரிசி வடித்த கஞ்சி தண்ணீரில் கொஞ்சம் ரோஸ் வாட்டரை விட்டு கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் நான்கு அல்லது ஐந்து நாட்கள் நன்றாக இருக்கும். இதை உங்களுடைய முகத்தில் தினம்தோறும் ஸ்பிரே செய்து வர முகச்சுருக்கம் குறையும். முகம் பொலிவு பெறும். கழுத்துப் பகுதிகளிலும் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள்.
அடுத்தபடியாக வடித்த சாதம் இருக்கிறது அல்லவா. அதை மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளுங்கள். இந்த சாதத்தை அரைப்பதற்கு பீட்ரூட் சாறு நமக்குத் தேவை. தேவையான அளவு பீட்ரூட் சாறை இந்த சாதத்தில் ஊற்றி விழுது போல இந்த ரைஸ் கிரீமை தயார் செய்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் நான்கு நாட்கள் வரை கெட்டுப் போகாது.

உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது இந்த ரைஸ் பேக்கை முகத்தில் ஃபேஸ் பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து அதன் பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். மூன்று நாட்கள் தொடர்ந்து இந்த ஃபேஸ் பேக்கை போடலாம். மூன்றே நாட்களில் உங்கள் சருமம் எவ்வளவு அழகாக மாறுகிறது என்பதை நீங்களே மூன்று நாட்கள் கழித்து கண்ணாடியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
பீட்ரூட்டை துருவி பிழிந்தால் சாறு நமக்கு கிடைக்கும். தண்ணீர் ஊற்றி சாறு எடுக்கக்கூடாது. பீட்ரூட்டை துருவி அப்படியே அரைத்துப் பிழிந்து சாறு எடுப்பது இந்த குறிப்புக்கு மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும். இந்த ரெமிடியை நீங்க ட்ரை பண்ணா நிச்சயமா மீண்டும் மீண்டும் இந்த குறிப்பை ட்ரை பண்ணிட்டு இருப்பீங்க. அந்த அளவுக்கு பெஸ்ட் ரிசல்ட் கிடைக்கும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்