நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பெண்களே உங்கள் உதட்டின் மேல் இருக்கும் முடியை 7 நாளில் அகற்ற இதை போட்டால் மட்டும் போதும்

பெண்களே உங்கள் உதட்டின் மேல் இருக்கும் முடியை 7 நாளில் அகற்ற இதை போட்டால் மட்டும் போதும்.

இந்த ரெமிடி நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்த மிகவும் அருமையான குறிப்பாகும். ஆனால் இதனை பயன்படுத்த இப்போதுள்ள இளைய தலைமுறையினர் பெரிதும் தயக்கம் கொள்கிறார்கள். ஆனால் இப்போது இருக்கும் செயற்கையான முறையை பின்பற்றுவதையே பலரும் விருப்பம் கொள்கின்றனர். உதட்டின் மேல் தேவையில்லாத முடிகள் இருப்பதால் முகம் பளிச்சென்று இல்லாமல் மிகவும் டல்லாக தோன்றும். இப்படி உதட்டின் மேல் இருக்கும் முடியை ஒரே வாரத்தில் அகற்றுவதற்க்கு தயங்காமல் இதனை ட்ரை செய்து பாருங்கள். தேவையற்ற முடிகள் அனைத்தும் உதிர்ந்து உங்கள் முகம் பளபளப்பாக மாறிவிடும். வாருங்கள் இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:

கிழங்கு மஞ்சள் – ஒன்று, 
மஞ்சள் உரசும் சுரசுரப்பான கல் – 1, உப்பு – ஒரு ஸ்பூன், 
தண்ணீர் – சிறிதளவு.

பயன்படுத்தும் முறை:

மஞ்சளில் பல வகைகள் இருக்கின்றன. ஆனால் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கக்கூடிய கிழங்கு மஞ்சளை வாங்கி கொள்ள வேண்டும். இதனை அரைத்து தான் பயன்படுத்த முடியும். பிறகு ஒரு சொரசொரப்பான கல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் மீது அரை ஸ்பூன் உப்பு சேர்த்துக் கொண்டு, அதன் மீது இரண்டு சொட்டு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதன் மீது கிழங்கு மஞ்சளை வைத்து நன்றாக உரச வேண்டும். இவ்வாறு கிழங்கு மஞ்சளை உரசிக் கொண்டிருக்கும் பொழுது மஞ்சள் சாந்தாக மாறும். பின்னர் இந்த கலவையை எடுத்து உதட்டின் மேல் இருக்கும் முடியின் மீது தடவி விட வேண்டும். பிறகு இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு விட்டு, மறுநாள் காலை தண்ணீரில் முகத்தை கழுவும் பொழுது அங்கு இருக்கும் முடிகள் உதிர ஆரம்பிக்கும்.

இவ்வாறு இரவு முழுவதும் வைக்க முடியாவிட்டாலும், மஞ்சள் தடவி 30 நிமிடம் கழித்து எதிர்ப்புறமாக நன்றாகத் தேய்த்து, அதன் பின்னர் சுத்தம் செய்ய வேண்டும். தொடர்ந்து ஏழு நாட்கள் செய்து வர முடிகள் அனைத்தும் முழுவதுமாக உதிர்ந்து விடும். பின்னர் உதட்டின் மீது மறுபடியும் முடிகள் வளராமல் இருக்க இதனை இருபது, முப்பது நாட்களுக்குத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
ஏழு அல்லது எட்டு நாட்கள் இவ்வாறு தொடர்ந்து செய்த பிறகு, அடுத்த நாளிலிருந்து இவற்றுடன் உப்பு சேர்த்துக் கொள்ளாமல் வெறும் மஞ்சளை மட்டும் வைத்து தடவி வரலாம். கஸ்தூரி மஞ்சளை விட கிழங்கு மஞ்சளில் தான் அதிகப்படியான சக்தி இருக்கிறது. எனவே இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடியை எளிதாக நீக்க முடியும்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்