மூக்கடைப்பு, தொண்டை வலிக்கு குட்பை சொல்லுங்கள்.. ஆயுர்வேத கஷாயம் இங்கே!
- Get link
- X
- Other Apps
ஆயுர்வேத பயிற்சியாளர் டிக்ஸா பவ்ஸர், மூன்று வழிகளில் பயன்படுத்தக்கூடிய ஒரு கஷாய செய்முறையைப் பகிர்ந்துள்ளார்.
ஜலதோஷம், மூக்கடைப்பு மற்றும் இருமல் போன்ற பருவகால பிரச்சனைகள் மிகவும் பொதுவானவை. அதனால்தான் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். ஆனால் இந்த அறிகுறிகளில் சிலவற்றை நீங்கள் ஏற்கனவே அனுபவித்திருந்தால், இந்த ஆயுர்வேத தீர்வு உங்களுக்கு உதவும்.
ஆயுர்வேத பயிற்சியாளர் டிக்ஸா பவ்ஸர், மூன்று வழிகளில் பயன்படுத்தக்கூடிய ஒரு கஷாய செய்முறையைப் பகிர்ந்துள்ளார்.
பாருங்கள்
இந்த மந்திர ஆயுர்வேத கஷாயத்தை – நீங்கள் பருகினாலும், நீராவி பிடித்தாலும் அல்லது அதைக் கொண்டு வாய் கொப்பளித்தாலும் சரி- இது எல்லா வகையிலும் பயனுள்ளதாக இருக்கும். கடுமையான இருமல் / சளி / மூச்சுத் திணறல் ஆகியவற்றில், விரைவான நிவாரணம் பெற 3 வழிகளிலும் இதைப் பயன்படுத்தலாம்.
*நீராவி பிடிக்க
*குடிப்பதற்காக
*வாய் கொப்பளிக்க
உங்களுக்கு அல்லது உங்கள் அன்புக்குரியவருக்கு சளி/இருமல்/தும்மல் போன்றவை ஏற்பட்டிருந்தால், இந்த கஷாயத்தை முயற்சிக்கவும்,” என்று அவர் பரிந்துரைத்தார்.
அதை எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
2 கிளாஸ்- தண்ணீர்
புதினா இலைகள்- கைப்பிடி
1 தேக்கரண்டி – ஓமம் விதைகள்
½ தேக்கரண்டி – வெந்தய விதைகள்
½ தேக்கரண்டி – மஞ்சள்
செய்முறை
* 2 கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்
* அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.
* மிதமான தீயில் 7-10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
அதை எப்படி பயன்படுத்துவது?
*நீராவி பிடிக்கலாம்.
*இந்த கஷாயத்தை வெறும் வயிற்றில் அல்லது பகலில் எந்த நேரத்திலும் (உணவுக்கு 1 மணிநேரம் கழித்து) வடிகட்டி குடிக்கவும்.
*ஒரு நாளைக்கு மூன்று முறை வாய் கொப்பளிக்கவும்.
ALSO READ : எலும்பை வலுவாக்கும் உளுந்தங்களி ரெசிபி.. எப்படி செய்றதுனு பாருங்க!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment