நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

டீ, காபி ஹார்லிசுக்கு பதில் இப்படி செய்து குடித்து பாருங்கள். உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த குறையும் இருக்காது....

 பொதுவாகவே காலையில் எழுந்திருக்கும் போது சிலருக்கு டீ அல்லது காபி கையில் இருக்க வேண்டும். அப்போது தான் அன்றைய நாள் அவர்களுக்கு இனிதாக துவங்கும்.


இவ்வாறு டீ அருந்தி விட்டு தான் பலரும் வேலை செய்யவே துவங்குகிறார்கள். இதனை வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். ஒரு நாளைக்கு டீ குடிக்க முடியவில்லை என்றால் அன்றொரு நாள் முழுவதுமே அவர்களுக்கு எதையோ இழந்தது போல் தோன்றும். ஆனால் இந்த டீ, காபி குடிப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கிறதா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனவே இந்த டீ, காபிக்கு பதிலாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவும் இந்த புரோட்டீன் பவுடரை தயார் செய்து வைத்துக்கொண்டால் போதும். தினமும் இதனை பாலுடன் சேர்த்து கலந்து குடிக்கும் பொழுது நமது உடலுக்குத் தேவையான அளவு புரதச்சத்து, கால்சியம் சத்து அனைத்தும் கிடைக்கிறது. வாருங்கள் இந்த புரோட்டீன் பவுடரை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.


தேவையான பொருட்கள்: 


வேர்க்கடலை – ஒரு கப்,

 பொட்டுக்கடலை – ஒரு கப்,

 கம்பு – ஒரு கப்,

 கேழ்வரகு – ஒரு கப்,

 கோதுமை – ஒரு கப், 

ஜவ்வரிசி – ஒரு கப், 

ஏலக்காய் – 4, 

சுக்குப் பொடி – ஒரு ஸ்பூன்.


 செய்முறை: 

முதலில் அடுப்பை பற்ற வைத்து, ஒரு இரும்பு கடாய் அல்லது மண் சட்டியை வைத்து கொள்ள வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் வேர்க்கடலையை சேர்த்து நன்றாக வறுத்துக் கொண்டு, அதனை தனியாக ஒரு தட்டில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

பின்னர் கம்பு பயிரை சேர்த்து நன்றாக மணம் வரும் வரை வறுத்துக் கொண்டு, அதனையும் அதே தட்டிற்க்கு மாற்ற வேண்டும். பின்னர் கோதுமையையும் நன்றாக வறுத்து தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஜவ்வரிசியை வறுத்து கொள்ள வேண்டும். பின்னர் கம்பையும் மிதமான தீயில் நன்றாக வறுத்து, அனைத்தையும் ஒரே தட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 பின்னர் இவை அனைத்தையும் நன்றாக ஆறவைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் 4 ஏலக்காய் சேர்த்து அனைத்தையும் பவுடராக அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் இவற்றுடன் ஒரு ஸ்பூன் சுக்குப் பொடி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு இவற்றை ஒரு சல்லடை பயன்படுத்தி சுத்தமாக சலித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதனை ஒரு காற்றுப்புகாத கண்ணாடி டப்பாவில் சேர்த்து இறுக்கமாக மூடி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கப் காய்ச்சிய பாலில் ஒரு ஸ்பூன் இந்த புரோட்டீன் பவுடரை கலந்து, அதனுடன் சிறிது அளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து குடித்தால் மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். அது மட்டுமல்லாமல் உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.



ALSO READ : வயிற்றில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகள் கரைய இந்த சுவையான தோசை மட்டும் போதும்........

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்