நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஸ்கிப்பிங் பாய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

 தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது.

ஸ்கிப்பிங் பயிற்சி செய்யும் போது ஒரு நிமிடம் செய்பவர்களுக்கு தோராயமாக 10 முதல் 25 கலோரிகள் குறைகிறது. அப்போது நீங்கள் 20 நிமிடம் ஸ்கிப்பிங் செய்தால் 500 கலோரிகள் குறைகிறது.

தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம். 

  • உடல் உறுப்புகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும்.

  • கயிற்றில் துள்ளி குதிப்பது இதயத்தை வலிமையாக்கும். இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

  • கயிற்றில் குதிப்பது மன நிலையை மேம்படுத்தும். கவனம் செலுத்தும் திறனை அதிகரிக்கச் செய்யும்.

  • ஸ்கிப்பிங் செய்வது உடலின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். விரைவாக சோர்வு எட்டிப்பார்க்கும் நிலையை மாற்றிவிடும்.

  • கவலை அல்லது மனச்சோர்வு அடையும் சமயத்தில் ஸ்கிப்பிங் பயிற்சி பெறலாம். அது உடல் நலனிலும், மன நலனிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

  •  தினமும் கயிற்றில் குதித்து பயிற்சி பெறுவது எலும்புகளை வலுவடையச் செய்யும்.

  • இந்த பயிற்சியின்போது அதிக வியர்வை உற்பத்தியாகும். இதன் மூலம் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும். இதனால் சருமம் இயற்கையாகவே பொலிவு பெறும்.

  • உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பயிற்சியை உடனே தொடங்கிவிடுங்கள். இது மெட்டபாலிசத்தை துரிதப்படுத்தி தொப்பையை குறைக்கும்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!