நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தினமும் 300 கலோரிகள் வரை எரிக்க வேண்டுமா? அப்போ மறக்கமால் இந்த உடற்பயிற்சியை செய்து வாருங்க

 அதிகமான கலோரிகள் உடலில் சேரும்போது அவை கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிப்பிற்கு வழி வகுக்கின்றன. இதனை எளிய முறையில் குறைக்க  ஒரு சில எளிய பயிற்சிகள் உள்ளன.

அவற்றை பின்பற்றுவதன் மூலம் அதிகப்பட்சமாக ஒரு நாளைக்கு 300 கலோரிகளை நாம் எரிக்க முடியும்.

எனவே இந்த உடற்பயிற்சிகள் கலோரிகளை எரித்து உடல்  எடையை குறைக்க உதவுகின்றன. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம். 


க்ராஷ் ஜாக் ஃப்ரண்ட் ரைஸ்

முதலில் உங்கள் கால்கள் மற்றும் தோள்பட்டையை அகலமாக வைத்துக்கொள்ளவும். இப்போது உங்கள் கைகளை மேலே உயர்த்தி நீட்டி வைத்துக் கொள்ளவும். இப்போது மேல் நோக்கி குதிக்கவும், குதிக்கும்போது உங்கள் வலது கால் இடது காலுக்கு முன்புறமாக கொண்டு செல்லவும். அந்த நேரத்தில் உங்கள் கைகளையும் உயர்த்தவும்.

பிறகு மீண்டும் குதித்து பழைய நிலைக்கு திரும்பவும். இடைவெளி விட்டு விட்டு இந்த பயிற்சியை உங்களுக்கு ஏற்றாற் போல செய்யவும்.

அதிகமான எடை கொண்டவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு இந்த பயிற்சி கடினமானதாக இருக்கலாம். கடினமாக இருக்கிறது என்பவர்கள் உங்கள் வசதிக்கு தகுந்த பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

ட்ராப் ஸ்குவாட் அல்ட் ஃப்ளோர் டச்

உங்கள் கால்களை சற்று அகலமாக வைத்துக்கொள்ளவும். இரண்டு பாதங்களும் இணையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கால் விரல்களை சற்று வெளியே நீட்டி வைத்துக் கொள்ளவும். இப்போது கைகளில் டம்பள்ஸ்களை எடுத்துக்கொள்ளவும்.

நேராக நிற்கவும். பிறகு கீழே குனிந்து மேலே எழுந்திருக்கவும். எழுந்திருக்கும்போது குதிக்கவும். இந்த நிலையில் டம்பள்ஸ் உங்கள் கைகளிலேயே இருக்க வேண்டும்.

இந்த முறையை மீண்டும் மீண்டும் செய்யவும்.

பவர் ஸ்பிரிண்ட்

இது ஒரு ஓட்ட பயிற்சியாகும். உங்களால் முடிந்த அளவு வேகமாக ஓடவும். ஓடும்போது உங்களால் முடிந்த அளவு கால்களை உயர்த்தவும். இது கால்களுக்கு நன்மை பயக்கக்கூடிய பயிற்சியாக உள்ளது.

ஸ்ப்லிட் லங் டூ ட்ராப் ஸ்குவாட்

உங்கள் உடலை நேராக வைத்துக்கொள்ளவும். உங்கள் முதுகு பகுதி நேராக இருக்க வேண்டும். இப்போது உங்கள் தோள்களை தளர்த்தி கைகளை இடுப்பில் வைக்கவும்.

பிறகு இடது முழங்காலை 90 டிகிரி கோணத்தில் மடக்கி குனியவும், இந்த நிலையில் வலது காலானது முன்னோக்கி செல்ல வேண்டும்.

தொடர்ந்து உடலை கீழறக்கி வலது காலை முன்னோக்கி உயர்த்தவும். இப்போது மீண்டும் ஆரம்ப நிலைக்கு வரவும்.

கிக் டபுள் போகோ ஜம்ப்

உங்கள் கைகளை தலைக்கு பின்னால் வைத்துக் கொள்ளவும். மிகக் குறைந்த அளவில் முழங்காலை மடக்கி மேல்நோக்கி குதிக்கவும். கிட்டத்தட்ட இது தவளை குதிப்பது போன்ற செய்முறை ஆகும். ஆனால் தவளை முறையிலேயே கைகளை பயன்படுத்தாமல் இதை நாம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முறை குதிக்கும் போதும் இடுப்பு மற்றும் முழங்காலுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. மேலும் கணுக்கால் பலமடைகிறது. ஒவ்வொரு முறை அமரும்போதும் விரைவாக தரையில் இருந்து குதிக்கவும். இதை மொத்தமாக இரண்டு முறை செய்யலாம்.

உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு ஒரு முறை செய்வதே கடினமாக இருக்கலாம். எனவே அவர்கள் இந்த பயிற்சி கடினமாக இருந்தால் வேறு பயிற்சிகளை செய்யலாம். 



ALSO READ : தொப்பையை குறைக்க வேண்டுமா? Flat tummy-க்கு மூன்றே மூன்று எளிய பயிற்சிகள்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!