நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தேவையில்லாத நொறுக்குத் தீனிகளால் உடல் எடை கூடுகிறதா?- தவிர்க்கும் வழி இதுதான்......

 நொறுக்குத்தீனியை தவிர்ப்பதற்கு சிறந்த வழி என்னவெனில், சாப்பிட்டவுடன் பல் விளக்கும் பலரை நாம் பார்த்திருப்போம். நாம் அவர்களின் இந்தச் செய்கையை obsession என்றும் கூட கேலி பேசியிருப்போம், ஆனால் நொறுக்குத்தீனிகளை பெரிய அளவில் தவிர்க்க இந்த பல் விளக்கும் செயல்தான் உதவுவதாக பல வெளிநாட்டு ஆய்வுகள் எடுத்தியம்பியுள்ளன.


நம்மில் பலர் நொறுக்குத்தீனிகளுக்கு அடிமை, அதுவும் டிவியில் சீரியல்கள், மேட்ச்கள், சினிமாக்களைப் பார்க்கும் போதோ அல்லது வாட்ஸ் அப், ஃபேஸ்புக் நோண்டும்போதோ நொறுக்குத்தீனி சாப்பிட்டுக் கொண்டே இருப்பது இப்போதெல்லாம் நாம் அடிக்கடி பார்க்கும் காட்சி, இப்படிச் செய்தால் உடல் எடை அதிகரிக்காமல் என்ன செய்யும்? உடல் அதன் வடிவத்தை இழந்து இடுப்பு பெருத்து தோள்கள் குறுகி நம் அழகைக் கெடுக்காமல் இருக்குமா?


எனவே நொறுக்குத்தீனி உடல் எடை அதிகரிப்பின் பிரதான காரணம் என்று பல ஆய்வுகள் எடுத்துக் காட்டியுள்ளன, குறிப்பாக பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் நொறுக்குத்தீனிகளுக்கு மவுசும் அதிகம், உடல் எடை அதிகரிக்கும் மவுசும் அதிகம். ஏனெனில் இவற்றில் ‘பிரிசர்வேட்டிவ்’ எனப்படும் கெட்டுப்போகாமல் இருக்கச் சேர்க்கப்படும் பொருளின் ரசாயன விளைவினால்  உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்து உடல் எடை கூடுகிறது.


நொறுக்குத்தீனிகளுக்கு அடிமையாகியிருப்பவர்களை நாம் பார்த்திருப்போம். இதுதான் உணவு அடிமைப்பழக்கத்திற்கும் இட்டுச் செல்கிறது.

நொறுக்குத்தீனியை தவிர்ப்பதற்கு சிறந்த வழி என்னவெனில், சாப்பிட்டவுடன் பல் விளக்கும் பலரை நாம் பார்த்திருப்போம். நாம் அவர்களின் இந்தச் செய்கையை obsession என்றும் கூட கேலி பேசியிருப்போம், ஆனால் நொறுக்குத்தீனிகளை பெரிய அளவில் தவிர்க்க இந்த பல் விளக்கும் செயல்தான் உதவுவதாக பல வெளிநாட்டு ஆய்வுகள் எடுத்தியம்பியுள்ளன.

ஒரு முழு உணவைச் சாப்பிட்ட பிறகு பல் விளக்கும் பழக்கம் இருந்தால் நொறுக்குத்தீனி திங்கும் ஆசை குறைந்து விடும். அந்த ‘அர்ஜ்’ இருக்காது. பல் விளக்கிய பிறகு எதையும் சாப்பிடக் கூடாது என்ற ஒரு கட்டுப்பாடு நம்மிடையே ஏற்படும். இதை நிறைய பேர் கடைப்பிடித்து உடல் எடை விவகாரத்தில் சக்ஸஸ் ஆகியுள்ளனர்.


எனவே சாப்பிட்ட பிறகு மவுத்வாஷ் அல்லது பல்விளக்குவதை பழக்கமாகக் கொண்டால் தேவையற்ற நொறுக்குத்தீனி அதன் பக்கவிளைவான உடல் எடை அதிகரிப்பிலிருந்து தப்ப முடியும்.
டயட் என்பது உடல் எடையைக் குறைக்க எப்போதும் உதவும் என்று கூற முடியாது. ஆரோக்கியமான உணவுப்பழக்க முறைதான் உதவும்.

முதலில் வேகம் வேகமாக சாப்பிடக்கூடாது, ஏனெனில் அது நம்மை அறியாமலேயே கலோரியை எரிக்கும் உடலின் தன்மையை குறைத்து விடும். மெதுவாக, மென்று சாப்பிட வேண்டும் என்று அந்தக் காலத்தில் பெரியோர்கள் கூறியதில் பெரிய உண்மை அடங்கியுள்ளது.


சர்க்கரை இல்லாத காபி குடித்தால் நம் சக்தியை அதிகரித்து அதிக கலோரிகளை எரிக்க உதவும். பிளாக் காஃபி என்பது உடல் எடையைக் குறைக்கும் சிறந்த நண்பன் என்றும் ஆய்வுகள் எடுத்தியம்பியுள்ளன. ஏனெனில் இது கலோரியை எரிக்க உதவுவதோடு கலோரியே இதில் இல்லை என்பதும் கூடுதல் சாதகம்.
சர்க்கரை, அதிக கலோரிகள் இல்லாத வெறும் தண்ணீர் குடிப்பதும் உடல் எடையைக் குறைக்க உதவும். ஒவ்வொரு 17 அவுன்ஸ் குடிநீரும் 24-30% கலோரியை குறைக்கிறது என்கிறது மருத்துவ ஆய்வு. சர்க்கரை உள்ள சாஃப்ட் ட்ரிங்க்ஸ் போன்றவை உடல் பருமனுக்குப் பிரதான காரணமாகும்.


வெந்நீர் குடிப்பதும் உடல் எடை கூடுவதை தடுக்கும் ஏனெனில் வெந்நீர் அருந்துவதன் மூலம் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறி ரிமானம் நல்ல முறையில் நடைபெறும். வெந்நீர் உடலில் உள்ள கொழுப்பை சிதைத்து கலோரியை எரிக்க உதவும்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்