கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்களை அதிகம் எடுத்துக்கொண்டால் அவை கொழுப்பாக மாறிவிடும். காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுப் பொருட்கள் கொழுப்பை குறைக்க வகைசெய்யும்.
கார்போஹைட்ரேட், உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. சர்க்கரை, நார்ச்சத்து, ஸ்டார்ச் ஆகியவற்றை குளுக்கோஸாக பிரித்து உடலுக்கு ஆற்றலாக வழங்குகிறது.
அதனால் அன்றாடம் சாப்பிடும் உணவில் 50 முதல் 60 சதவீதம் கார்போஹைட்ரேட் இடம் பெற்றிருக்க வேண்டும். 'சிம்பிள்', 'காம்ப்ளக்ஸ்' என இரண்டு வகை கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுப் பொருட்கள் கொழுப்பை குறைக்க வகைசெய்யும்.
மைதா போன்ற சிம்பிள் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள் செரிமானமாவதற்கு அதிக நேரம் எடுக்கும். அவற்றை தொடர்ந்து சாப்பிடுவது நீரிழிவு, இதய, நோய், மலச்சிக்கல், கொழுப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை உருவாக்கலாம்.
உணவில் சீரான அளவில் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் இடம்பெற்றால், அது கொழுப்பை குறைக்க உதவும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பைக் குறைக்க சிம்பிள் கார்போஹைட்ரேட்டுகளுக்குப் பதிலாக காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
நல்ல கார்போஹைட்ரேட்கள் பொதுவாக பக்க கொழுப்பு எனப்படும் உள்ளுறுப்பு கொழுப்பை குறைக்க உதவும். இந்த கொழுப்புதான் உடலுக்கு மிகவும் ஆபத்தானது. பலவிதமான நோய்களையும் உருவாக்கக்கூடியது. ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்களை உணவில் 50 முதல் 60 சதவீதம் சேர்த்துக் கொள்ளலாம்.
அதற்கு மேல் சேர்க்கக்கூடாது. ஏனெனில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்களை அதிகம் எடுத்துக்கொண்டால் அவை கொழுப்பாக மாறிவிடும். உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பை விரைவாக கரைக்க மன அழுத்தம் இல்லாத மற்றும் ஆரோக்கியமான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.
ஜிம்முக்கு சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வதால் மட்டுமே கொழுப்பையோ, உடல் எடையையோ குறைத்துவிட முடியாது. ஆரோக்கியமான உணவு பழக்கத்தையும் பின்பற்ற வேண்டும்.
அதே நேரத்தில் உடல் தசையை வலுப்படுத்த விரும்புபவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அவர்கள் கார்போஹைட்ரேட் உணவுகளையும் சாப்பிடலாம். உடற்பயிற்சிக்கு பிறகு ஹார்போஹைட்ரேட் நிறைந்த பழங்களை உட்கொள்ளலாம்.
பார்லி, பாப்கார்ன், தயிர், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ஓட்ஸ், கோதுமை பிரெட், பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு, பூசணி, புரோக்கோலி, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் போன்ற காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஏற்றது. நொறுக்கு தீனிகள், குளிர்பானம், ஜஸ்கிரீம், சாக்லெட் போன்ற சிம்பிள் காம்ப்ளக்ஸ் உண்வுகளை தவிர்த்துவிடுவது நல்லது.
Comments
Post a Comment