நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நீங்கள் நம்பிக்கையாளரா? தற்காப்பாளரா? இந்த படம் சொல்கிறது.........

 நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறீர்களா அல்லது தற்காப்புடன் இருக்கிறீர்களா என்று இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் முதலில் என்ன பார்த்தீர்களோ அது இன்றைய நாளில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதையும் மக்கள் எப்படி உணருகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறீர்களா அல்லது தற்காப்புடன் இருக்கிறீர்களா என்று இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் நிச்சயமாக உங்கள் மனதுடன் ஒரு மாயாஜால விளையாட்டை விளையாடுகிறது. ஆனால், அது உங்கள் மனதில் ஆழமாக மறைந்துள்ள இரகசியங்களை வெளிப்படுத்துகிறது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் ஒவ்வொரு நபருக்கும் எப்படி வெவ்வேறு கோணங்களில் தோன்றி அவர்களின் ஆளுமையை வெளிப்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது என்பது ஆச்சரியாமாக இருக்கிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் முதலில் என்ன பார்க்கிறீர்களோ அதன் அடிப்படையில் உங்களை நம்பிக்கையாளரா அல்லது தற்காப்பாளரா என்று காட்டுகிறது. இது ஒரு வகையான மூளைக்கு வேலை கொடுக்கும் படம், இது உண்மையை வெளிப்படுத்த மூளையை குழப்புகிறது.

உங்கள் முதல் சந்திப்பில் மற்றவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? எப்பொழுதும் மக்களைப் பற்றி நீங்கள் விட்டுச்செல்லும் முதல் அபிப்ராயம்தான் முக்கியமானது. உங்களால் முடிந்தவரை நம்பிக்கையுடன் தோன்ற விரும்புகிறீர்கள். ஆனால் நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்பது உங்களுக்கு எப்போதும் தெரியாது, இல்லையா? இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம், மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை உங்களுக்குச் சொல்கிறது. நீங்கள் நம்பிக்கையாளரா அல்லது தற்காப்பாளரா என்பதை சொல்கிறது.

கீழே உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பாருங்கள் முதல் பார்வையில் உங்களுக்கு என்ன தெரிகிறது என்று கூறுங்கள்.

இந்த ஓவியம் அமெரிக்க ஓவியரான டாம் ஃபிரிட்ஸனால் உருவாக்கப்பட்டது. இது ஒரு பெண் மண்டியிட்டிருபதைக் காட்டுகிறது, ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முற்றிலும் வித்தியாசமான ஒன்றைப் பார்ப்பதாக பலர் கூறியுள்ளனர்.


நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் என்ன பார்த்தீர்கள்? பெண்ணா அல்லது மண்டை ஓட்டையா?

நீங்கள் முதலில் ஒரு பெண்ணைப் பார்த்திருந்தால்:

இந்த படத்தில் முதல் பார்வையில் ஒரு பெண் மண்டியிட்டதை நீங்கள் பார்த்திருந்தல், நீங்கள் நிச்சயமாக தற்காப்பு இயல்புடையவராக உணரப்படுவீர்கள். நீங்கள் சோர்வாக உணர்கிறீர்கள். மேலும், சூழ்நிலைகளுக்கு எதிராக உங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். உங்கள் தற்போதைய நேரத்தில் நீங்கள் உணர்ச்சி ரீதியாக சோர்வடைந்து இருக்கலாம். மண்டியிட்ட பெண்ணின் பார்வை அந்த நபரின் தற்காப்பு மனப்பான்மை பற்றி நிறைய கூறுகிறது. நீங்கள் இப்போது சுறுசுறுப்பாக உணரவில்லை. ஆனால், நீங்கள் ஒருபோதும் உறுதியானவர் இல்லை என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. இந்த ஆப்டிகல் இல்யூஷன் நீங்கள் இருக்கும் தற்போதைய சூழ்நிலையைப் பற்றி சொல்கிறது.

நீங்கள் முதலில் ஒரு மண்டை ஓட்டைப் பார்த்திருந்தால்:

நீங்கள் முதலில் ஒரு மண்டை ஓட்டைப் பார்த்திருந்தால், நீங்கள் ஒரு கடினமான நேரத்தைச் சந்திக்கிறீர்கள். மேலும், அவை உங்களிடம் வரும்போது அந்த சூழ்நிலைகளை தைரியமாக எதிர்கொள்கிறீர்கள். நீங்கள் ஒரு தீர்வைத் தேடுகிறீர்கள். ஆனால், தற்போது எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், நீங்கள் இப்போது எல்லாவற்றையும் கருணையுடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்கிறீர்கள். எனவே, மக்கள் உங்களைப் பற்றி முதலில் கவனிப்பது உங்கள் தன்னம்பிக்கை மற்றும் போராடும் மனப்பான்மையைத்தான் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.



ALSO READ : காட்டுக்குள் உதிர்ந்து கிடக்கும் இலைகள்… அதற்குள் ஒரு கொடூர பாம்பு… கண்டுபிடிங்க பார்க்கலாம்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்