நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குடிப்பதில் கின்னஸ் சாதனை படைத்த நபர்.. 24 மணி நேரத்தில் 56 பப்களுக்கு விசிட்...

 கரெத் மர்ஃபி என்ற நபர் 24 மணிநேரத்திற்குள் கார்டிஃப் நகரில் உள்ள 56 பப்புகளுக்கு வருகை தந்து, ‘குடித்து’ சாதனை செய்திருக்கிறார்!


வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும். ஒரு சிலர் அந்த ஆசையை நிறைவேற்றுவதற்காக அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்று, வினோதமான பல்வேறு செயல்களை செய்வார்கள்! உலகையே வியக்க வைக்கும் வகையில் பல கின்னஸ் ரெக்கார்டுகள் பதிவு செய்யப்படும். அதில் வாழ்க்கையை அனுபவித்து வாழ்வது என்பது பற்றிய ஒரு கின்னஸ் ரெக்கார்ட் சமீபத்தில் பதிவாகியுள்ளது! இதற்கெல்லாம் கூட கின்னஸ் ரெக்கார்டு இருக்கிறதா என்று வியந்து போகும் அளவுக்கு வேடிக்கையான ஒரு விஷயத்தை ஒரு நபர் செய்துள்ளார்.

குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் பலவகையான உணவுகள் சமைப்பது, அல்லது உணவுகள் சாப்பிடுவது என்று உணவு சம்பந்தப்பட்ட உலக சாதனைகள் பல இருக்கின்றன. ஆனால் 24 மணிநேரத்திற்குள் ஒருநபர் இத்தனை பார்களில் குடித்திருக்கிறார் என்ற புதிய கின்னஸ் ரிக்கார்டு ஒன்று பதிவாகியுள்ளது. இதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.


வாழ்க்கை வாழ்வதற்கு என்பது அவரவர் விரும்பும் விஷயத்தை எந்தவித தடையும் இல்லாமல், சுதந்திரமாக இயங்குவதை குறிக்கும். அந்தவகையில் 29 வயது ஐடி ஊழியர் செய்த சாதனை பலருக்கும் அவர் மீது பொறாமையை கூட உண்டாக்கலாம். இங்கிலாந்தில் உள்ள வேல்ஸில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான பப்களை விசிட் செய்து ஏற்கனவே இருக்கும் கின்னஸ் உலக சாதனையை இவர் முடித்திருக்கிறார். ஒவ்வொரு பப்பிலும் ஒரு பானமாவது குடிப்பது தான் இந்த உலக சாதனை முயற்சி என்று அவர் தெரிவித்துள்ளார். கரெத் மர்ஃபி என்ற நபர் 24 மணிநேரத்திற்குள் கார்டிஃப் நகரில் உள்ள 56 பப்புகளுக்கு வருகை தந்து, ‘குடித்து’ சாதனை செய்திருக்கிறார்!

இந்த சாதனையை செய்வதற்கு மதுபானம் தான் குடிக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. ஆனால் இந்த சாதனைக்கு தகுதி பெறுவதற்கு லைசென்ஸ் பெற்ற ஒரு பப்பில் குடிக்க வேண்டும் என்று கின்னஸ் ரெக்கார்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சாதனையை செய்த மர்ஃபி வெவ்வேறு பப்பில் பீர் குடித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் மதுபானம் இல்லாத சாதாரண பானங்களையும் குடிக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் இவர் ஆரஞ்சு ஜூஸ், ஆப்பிள் ஜூஸ், லெமன் ஜூஸ், கோக் மற்றும் பெப்சி ஆகியவற்றையும் குடித்திருக்கிறார்.

மர்ஃபி குடித்த பானங்களின் பட்டியல்

4.9 லிட்டர் ஆரஞ்சு ஜூஸ்

2.8 லிட்டர் ஆப்பிள் ஜூஸ்

1 லிட்டர் பீர்

500 மிலி எலுமிச்சை ஜூஸ்

284 மிலி டயட் பெப்ஸி

250 மிலி டேங்கோ

189 மிலி ப்ளாக்கரண்ட் கார்டியல்

125 மிலி கோக்

125 மிலி கிரான்பெர்ரி ஜூஸ்


மர்ஃபி பல ஆண்டுகளாக கின்னஸ் உலக சாதனைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். இங்கிலாந்தில் இருக்கும் அனைத்து நகரங்களுடன் ஒப்பிடும் பொழுது கார்டிஃப் நகரின் மையப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் லைசென்ஸ் பெற்ற பப், பார் மற்றும் கிளப்கள் இருக்கின்றன என்பதால் இந்த சாதனையை செய்வதற்கு கார்டிஃப் தான் மிகச் சிறந்த இடம் என்று முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்