நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடலுக்கு இதமும் சுகமும் தரும் நீராவி குளியல்

இயற்கை சிகிச்சை முறைகளில் மிக முக்கியமானது நீராவி குளியல். காலங்காலமாக, நம் பாரம்பரிய பழக்க வழக்கத்தில் எண்ணெய் குளியல் முறை உள்ளது. இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளில் எண்ணற்ற பலன்கள் உள்ளன.
நீர், நெருப்பு, பூமி, ஆகாயம், காற்று ஆகிய பஞ்ச பூதங்களின் சக்தியை கொண்டு இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்தவகையில் நீராவி குளியல் மற்றும் எண்ணெய் குளியலின் நன்மைகள், அதன் சிகிச்சை முறைகள் பற்றி காண்போம். 

இயற்கை சிகிச்சை முறைகளில் மிக முக்கியமானது நீராவி குளியல். இந்த நீராவி குளியல் சிகிச்சை எடுப்பதால் உடலின் தேவையற்ற கழிவுகளான யூரியா, யூரிக் அமிலம் போன்றவை வியர்வையின் வழியாக வெளியேறும்.

 அதனால் உடல் சோர்வு நீங்குவதுடன், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். அதுமட்டுமின்றி உடலில் உள்ள அனைத்து மூட்டு மற்றும் எலும்புகளுக்கும் நெகிழ்வுத்தன்மையும் கிடைக்கும். நீராவி குளியல் உடல் பருமனை குறைக்க உதவும். உடல் வலியை நீக்கும். 

இதுதவிர வாதநோய், தோல் வியாதிகள், ஆஸ்துமா போன்ற நோய்களை குணமாக்க உதவும். சர்க்கரை, உயர்ரத்த அழுத்த நோயாளிகள் டாக்டரின் ஆலோசனைப்படி மட்டுமே நீராவி குளியல் சிகிச்சை பெறவேண்டும். கர்ப்பிணிகளும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் டாக்டர் அனுமதி பெற்று இந்த சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும். முந்தைய காலத்தில், நீராவி குளியல் எடுப்பவரை கயிற்று கட்டிலின் மேல் அமர வைப்பார்கள். 

அதன்பிறகு போர்வையால் அவரை போர்த்தி விடுவார்கள். அதற்கு முன்பே, ஒரு சட்டியில் தண்ணீரை ஊற்றி, நொச்சி இலையை போட்டு மூடி அதை நன்கு கொதிக்க வைத்து தயார்நிலையில் வைத்திருப்பார்கள். 

அதன்பிறகு அந்த சட்டியை கயிற்று கட்டிலின் கீழ் வைத்து சட்டியின் மூடியை அகற்றி விடுவார்கள். அந்த சட்டியில் இருந்து நீராவி கயிற்று கட்டிலின் வழியே போர்வைக்குள் போகும். 

சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து போர்வையை நீக்கினால் போதும். நீராவி குளியல் எடுப்பவருக்கு நன்கு வியர்த்து உடலின் கழிவுகள் வெளியேறி விடும். தற்போது நவீன முறையில் எளிதாக நீராவி குளியல் சிகிச்சை எடுக்கலாம். இதற்கென நவீன எந்திரம் உள்ளது. 

அந்த நவீன எந்திரத்தில் உள்ள நாற்காலியில் நீராவி குளியல் சிகிச்சை எடுப்பவரை அமர வைக்க வேண்டும். அவரின் தலை வெளியே தெரியும்படி அந்த நாற்காலியை உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ சரி செய்து கொள்ள வேண்டும். 

அதன்பிறகு அந்த எந்திரத்தில் மூலிகை தைலம் அல்லது நொச்சி தைலம், யூக்கலிப்டஸ் தைலம் இவற்றில் ஏதாவது ஒன்றை ஊற்றி எந்திரத்தை இயக்கி விடலாம். அதிலிருந்து வரும் நீராவி உடல் முழுவதும் நன்கு பரவும். அப்போது உடலில் இருந்து வெளியேறும் வியர்வையின் மூலம் கழிவுகள் வெளியேறும். 

பொதுவாக நீராவி குளியலின் பலனை 8 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பெறலாம். காலங்காலமாக, நம் பாரம்பரிய பழக்க வழக்கத்தில் எண்ணெய் குளியல் முறை உள்ளது. இதுவே இன்றளவில் 'ஆயில் மசாஜ்' என்று அழைக்கப்படுகிறது.

 தொடர்ந்து எண்ணெய் குளியலை எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். பொதுவாக வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. அதனால் உடலின் வெப்பநிலை சமச்சீராக இருக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

 எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவைகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம். இதில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது அதிக பலன் தரும். சிலருக்கு இது ஒத்துக்கொள்ளாது. எண்ணெய் குளியலில் அறிவியல் பூர்வமாக தற்போது நிறைய முறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. 

எண்ணெய் தேய்த்து உடலின் தசைகளை தட்டுவதால், உடலில் ரத்த ஓட்டம் சீராகும். தோல் சுரப்பிகளின் பணி சீராக நடக்கும். உடலின் கொழுப்பு குறையும். உடலில் வலி நீங்கும். நன்கு தூக்கம் வரும். முகத்திற்கு பொலிவு கிடைக்கும். வயிற்றின் கழிவுகள் நீங்கும். செரிமான சக்தி அதிகரிக்கும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்