நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வித்தியாசமான வேலைகளைச் செய்து மாதம் ரூ. 2 லட்சம் சம்பாதிக்கும் லண்டன் பெண்... எப்படித் தெரியுமா?

 என்னதான் ஆயிரக்கணக்கில் சம்பளத்தை அள்ளிக் கொடுத்தாலும் சிலர் 9 டூ 5 வேலைகளில் பெரிதாக ஆர்வம் காட்டுவது இல்லை. அதற்கு பதிலாக எளிதில் பணம் சம்பாதிக்க கூடிய, குறைந்த நாட்கள் மட்டுமே வேலை செய்யக்கூடிய கிரியேட்டிவான அல்லது சுவாரஸ்யமான வேலைகளை தேடுகின்றனர்.


என்னதான் ஆயிரக்கணக்கில் சம்பளத்தை அள்ளிக் கொடுத்தாலும் சிலர் 9 டூ 5 வேலைகளில் பெரிதாக ஆர்வம் காட்டுவது இல்லை. அதற்கு பதிலாக எளிதில் பணம் சம்பாதிக்க கூடிய, குறைந்த நாட்கள் மட்டுமே வேலை செய்யக்கூடிய கிரியேட்டிவான அல்லது சுவாரஸ்யமான வேலைகளை தேடுகின்றனர். அப்படி லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு பிடித்த வித்தியாசமான வேலைகளைச் செய்து மாதம் 2 ஆயிரம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 2 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார்.

இங்கிலாந்தில் உள்ள யார்க்கைச் சேர்ந்த 33 வயதான ஜெம்மா, 2014 ஆம் ஆண்டு ஜெம்பாப்ஸ் கிராஃப்ட்ஸ் என்ற தனது சொந்த கைவினைத் தொழிலைத் தொடங்கினார். அதன் பின்னர் கூடுதல் வருமான ஆதாரங்களைப் பெறுவது தொடர்பாக சிந்திக்க ஆரம்பித்தார். எனவே கூடுதலாக பணம் சம்பாதிப்பதற்காக மிஸ்ட்ரி ஷாப்பிங் மற்றும் ஆன்லைன் சர்வேக்களை மிகவும் குறைந்த கட்டணத்தில் செய்து வருகிறார்.

மிஸ்ட்ரி ஷாப்பிங் என்பது குறிப்பிட்ட நிறுவனத்தின் கடைகள், உணவகம், ஓட்டல், வங்கி போன்ற இடங்களுக்கு நேரில் சென்று அவர்கள் வாடிக்கையாளர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள், எந்த மாதிரியான பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளார்கள், எவ்வளவு நேரம் வாடிக்கையாளர்களை சேவைக்காக காக்க வைக்கிறார்கள் என ஆய்வு செய்வது ஆகும். இதேபோல் ஆன்லைன் சர்வே மூலமாக குறிப்பிட்ட பொருட்கள் குறித்து நீங்கள் கருத்து தெரிவிக்கலாம். இதற்கு பல நிறுவனங்கள் பணம் செலுத்துகின்றன. இந்த வேலைகளை தான் ஜெம்மா செய்து வருகிறார்.

கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் இருந்து அதிக அளவிலான வருமானம் வராவிட்டாலும், ஜெம்மா அதனை பொழுதுபோக்கிற்காக நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது தேவைகளை சமாளிக்க தேவையான பணத்தை இதுபோன்ற மாற்று வேலைகளில் இருந்து சம்பாதித்து வருகிறார்.

இதுகுறித்து ஜெம்மா கூறுகையில், "நான்  இரண்டாவது வருமானம் ஈட்ட பல்வேறு வழிகளைப் பார்க்க ஆரம்பித்தேன், என்னால் முடிந்ததை நானே கற்றுக்கொண்டேன். ஸ்டோரில் இருந்து கிடைக்கும் வருமானத்தை விட எனது பிற வேலைகளில் இருந்து கிடைக்கும் வருமானம் அதிகமானது” என்கிறார்.

ஜெம்மா தற்போதுசராசரி வேலைகள் மிகவும் சலிப்பானவை என கருதுகிறார். ஜெம்மா தனது வருமானத்தில் சுமார் 1000 டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.1 லட்சம்) பூனைகளை பார்த்துக்கொள்வது, குறிப்பிட்ட பொருட்களைப் பற்றி கருத்து தெரிவிக்கும் ஃபோகஸ் குழுக்களில் பங்கேற்பது மூலம் சம்பாதிக்கிறார். மிஸ்ட்ரி ஷாப்பிங் மூலம் சுமார் 400 டாலர்களும் (இந்திய மதிப்பில் ரூ.40 ஆயிரம்), ஆன்லைன் சர்வே மூலமாக மாதம் 1000 டாலர்களும் (ரூ.1,00,000) சம்பாதித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி ஜெம்மா தனக்கான இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் இரண்டாவது வருமானத்திற்காக என்ன மாதிரியான வேலைகளைச் செய்யலாம், அதன் மூலம் எவ்வளவு வருமானம் ஈட்ட முடியும் போன்ற தகவல்களை பகிர்ந்து வருகிறார். இதன் மூலம் ஜெம்மா சோசியல் மீடியாவிலும் மிகவும் பிரபலமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!