நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சுவர்கள் வழியாக கூட பார்க்க முடியும்! மிரட்டலான இமேஜிங் கருவி...........

 இஸ்ரேலைச் சேர்ந்த கேமரோ-டெக் நிறுவனம் உருவாக்கிய Camero-Tech Xaver 1000 உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது.

அதன்படி அடுத்த தலைமுறைக்கான நவீன கையடக்க, உயர்-செயல்திறன் கொண்ட இமேஜிங் அமைப்பை உருவாக்கியது, இது சுவர்கள் வழியாக பார்க்க முடியும்.

Camero-Tech Xaver 1000-ஐ வைத்து பல்வேறு விடயங்களை செய்ய முடியும். அதாவது இராணுவப் படைகள், சட்ட அமலாக்கத் துறையினர், புலனாய்வு பிரிவுகள் போன்றவற்றுக்கான செயல்திறன் இதன் மூலம் அதிகரிக்கும்.

Xaver 1000 ஆனது சொந்த 3D 'சென்ஸ்-த்ரூ-தி-வால்' திறனைக் கொண்டுள்ளது, இது சுவர்கள் மற்றும் தடைகளுக்குப் பின்னால் உள்ளவற்றை கண்டறிந்து 'பார்க்க' உதவுகிறது.

பயனர்கள் பொருள்களின் உயரத்தைக் கண்டறியவும் கூட இதை பயன்படுத்தலாம். தொழில்நுட்பம் முற்றிலும் கதிர்வீச்சு இல்லாதது மற்றும் மனித வெளிப்பாட்டிற்கான சர்வதேச தேவைகளை கடந்து செல்கிறது.



ALSO READ : கல்லறை கட்டி இன்டர்நெட் எக்ஸ்புளோருக்கு அஞ்சலி: இணையத்தில் பரவும் வைரல் வீடியோ!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்