நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முடி கிடுகிடுன்னு அடர்த்தியாக வளரனுமா? வெந்தயத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க!

 இன்றைய இளைஞர்களின் முக்கிய பிரச்சனையாக முடி உதிர்தல் மற்றும் நரை முடி பிரச்சனை உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.


முடி உதிர்தலை பிரச்சனை குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்.

வழுக்கை, முடி உதிர்தல், வலுவிழந்த முடி மற்றும் நரை முடி போன்றவற்றை குறைக்க விலையுரந்த பொருட்களை தான் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு  இயற்கை பொருட்களை வைத்து கூட சரி செய்ய முடியும். .

அதில் வெந்தயம் பெரிதும் உதவுகின்றது. அதன்  விதைகள் உச்சந்தலையில் உள்ள வறட்சியை நீக்கவும், பொடுகை குணப்படுத்தவும், முடியை வலுப்படுத்தவும், கண்களுக்கு குளிர்ச்சியாகவும் மற்றும் மிக முக்கியமாக சிறந்த முடி உதிர்தலுக்கும் உதவுகிறது.

அந்தவகையில் இதனை எப்படி பயன்படுத்தலாம்? இது எப்படி உதவுகின்றது என்று பார்ப்போம். 

வெந்தயம் எப்படி உதவுகின்றது?  

வெந்தயம் நிகோடினிக் அமிலம் மற்றும் புரதத்தை முடிக்கு வழங்குகிறது. இது வேர்களை மீண்டும் கட்டமைக்கவும் வலுப்படுத்தவும் உதவுகிறது. இது உங்கள் முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதனால், நீளமான அடர்த்தியான மென்மையான முடியை நீங்கள் பெறலாம்.  

வெந்தயம் அல்லது மெத்தி விதைகள் ஆரோக்கியமான மற்றும் ஊட்டமளிக்கும் முடியைப் பெற உதவும். பொடுகு, முடி உதிர்தல்,வழுக்கை மற்றும் பிற முடி பிரச்சனைகளுக்கு மேத்தி விதைகள் மூலம் நீங்கள் தீர்வு காணலாம்.

வெந்தய விதைகள் முடியின் தரத்தை மேம்படுத்தி முடி அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் வளர உதவுகிறது. 

எப்படி பயன்படுத்தலாம்? 

  •   விதைகளை வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் நன்கு தடவவும். எண்ணெயை உச்சந்தலையில் 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் நன்கு அலசவும்.

  •  விதைகளை இரவு முழுவதும் ஊறவைத்து, கெட்டியான தயிருடன் கலந்து முடி மற்றும் உச்சந்தலையில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரில் நன்றாக முடியை அலச வேண்டும். இது பொடுகு மற்றும் பிற உச்சந்தலையில் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கிறது. வெந்தய விதைகள் அல்லது இலைகளை ஷூ ப்ளவருடன் கலந்து குளிப்பது முடி மற்றும் உச்சந்தலையை குளிர்ச்சியாக்கும். 

முடி வளர்ச்சிக்கு வெந்தயம் வேலை செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? 

  வெந்தயமானது முடி உதிர்தலில் குறிப்பிடத்தக்க குறைப்பை வெளிப்படுத்துகிறது. வெந்தயத்தை நேரடியாக நீங்கள் தலையிலும் பயன்படுத்தலாம். வாய்வழியாகவும் எடுத்துக்கொள்ளலாம். இதை ஆறு மாதங்களுக்கு 300 mg/day வாய்வழியாக எடுத்துக் கொள்ளும்போது புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.


ALSO READ : அழகுக்கு அழகு சேர்க்கும் மேக்கப் நுணுக்கங்கள்.....


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!