நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

7 ஆண்டுகளுக்கு பிறகும் ஒரே இடத்தில் வசிக்கும் தெரு நாய்.! கூகுள் மேப்ஸ் இமேஜால் நெட்டிசன்கள் வியப்பு.!

Google Map | கூகுள் மேப்ஸில் 2012-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான புகைப்படங்கள் வெளிப்படுத்தியபடி ஒரு நாய் பல்கேரிய நகரமான ரூஸின் தெருக்களில் தெரு நாயாக திரிந்ததாக நம்பப்படுகிறது. ஆனால் 2019 -ல் கூகுள் மேப்ஸில் மீண்டும் அதே இடத்தில் குறிப்பிட்ட நாய் காணப்பட்டது.
முன்பெல்லாம் நாம் அலைந்து திரிந்து செய்த வேளைகளில் பலவற்றை தற்போது உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஒரு சில நொடிகளில் செய்து விட முடிகிறது. பில்கள் கட்டுவதில் துவங்கி வங்கி வேலைகள், உணவுகளை ஆர்டர் செய்வது வரை தற்போது ஸ்மார்ட் ஃபோன் மூலம் சில நொடிகளில் நடக்கிறது.

அது மட்டும் இல்லாமல் முன்பெல்லாம் தெரியாத இடங்களுக்கு முதல் முறை போகும் போது ஒருவித பதற்றம் மற்றும் தயக்கம் இருக்கும். வழியில் தென்படும் பலரிடம் நாம் செல்லும் இடத்திற்கு ரூட் கேட்டு போவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஆனால் இதுவும் ஸ்மார்ட்போன் மூலம் மாறி விட்டது. கூகுள் மேப் அம்சத்தின் மூலம் நாம் யாரிடமும் எந்த உதவியும் கேட்காமல் நமக்கு இதுவரை தெரியாத புதிய இடங்களுக்கு எளிதில் சென்று விடலாம். கோடிக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் கூகுள் மேப்ஸ் உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் ஆப்ஸ்களில் ஒன்றாக இருக்கிறது.

கூகுள் மேப்ஸை பயன்படுத்தும் போது நாம் வழக்கமாக ஒரு புதிய இடத்திற்கான வழிகளை சரிபார்க்கிறோம். கூகுள் மேப்ஸ் செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு ஆதாரங்களில் இருந்து படங்களை தொகுத்து நமக்கு காண்பிக்கும் போது விசித்திரமான மற்றும் நம்புவதற்கு கடினமான விஷயங்களை பார்க்கும் போது யூஸர்கள் குழம்பி தானே போவார்கள்.
இருண்ட தீவு முதல் ராணுவ விமானங்கள் உருக்குலைந்து கிடப்பது வரை கூகுள் மேப்ஸ் மக்களுக்கு எந்த துப்பும் இல்லாத சில வினோதமான விஷயங்களை இதற்கு முன் பல முறை வெளிப்படுத்தி உள்ளது. இந்நிலையில் மற்றொரு வினோத காட்சியை வழங்கியுள்ளது கூகுள் மேப்ஸ். அது என்னவென்றால் சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகும் பல்கேரியா நாட்டின் ஒரு குறிப்பிட்ட அதே பகுதியில் வாழும் நாயை கண்டு யூஸர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

கூகுள் மேப்ஸில் 2012-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான புகைப்படங்கள் வெளிப்படுத்தியபடி ஒரு நாய் பல்கேரிய நகரமான ரூஸின் தெருக்களில் தெரு நாயாக திரிந்ததாக நம்பப்படுகிறது. ஆனால் 2019 -ல் கூகுள் மேப்ஸில் மீண்டும் அதே இடத்தில் குறிப்பிட்ட நாய் காணப்பட்டது. 2012-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம், பார்க்கிங் பகுதியில் காரின் பின்னால் மணல் நிறத்திலான நாய் இருப்பதைக் காட்டுகிறது. அதே நேரம் கூகுள் மேப்ஸ் கேமரா கார் மூலம் 2019-ல் எடுக்கப்பட்ட சமீபத்திய படம் அதே நாய் மேட்டி ஸ்டோய்கோவ் தெருவில் (Matei Stoykov) அதே கூழாங்கல் நடைபாதையில் படுத்திருப்பதை காட்டுகிறது.

Google Maps subreddit-ல் Reddit யூஸர் Edish03 என்பவரால் முதலில் இது போஸ்ட் செய்யப்பட்டது. இதை பார்த்த நெட்டிசன்கள் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு அதே இடத்தில கேமராவில் சிக்கி உள்ள நாய் 2012-ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் அதே நாய் போலவே இருப்பதை கண்டு திகைத்தனர். ஒரே பகுதியில் ஒரே நாயை இரண்டு முறை கூகுள் மேப்ஸ் படம் பிடித்தது இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பல யூஸர்கள் நாய் இன்னும் உயிருடன் இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறயாது என்று கூறினர்.
இருப்பினும் ஒரு சில யூஸர்கள் இது 2012-ல் போட்டோவில் சிக்கிய அதே நாய் என்று நம்புவது கடினம், எனினும் அதன் சந்ததிகளில் ஒன்றாக இருக்கலாம் என்று கமெண்ட்ஸ் செய்து உள்ளனர். ஆனால் பெரும்பாலான யூஸர்கள் இரண்டு நாய்களும் ஒன்று தான் என்று உறுதியாக நம்பி விவாதத்தில் இறங்கியதால் குறிப்பிட்ட இந்த போஸ்ட் சோஷியல் மீடியாக்களில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்