நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தலைமுடி அலங்கரிப்பதற்காக 6000 மைல் பயணம் செய்த பெண்: எங்கிருந்து எங்கு? -விரிவான தகவல்கள்

 தலைமுடி சிகிச்சைக்காக அமெரிக்காவிலிருந்து துருக்கி பயணித்த அந்த பெண் அதனை டிக் டாக் வீடியோவாக பதிவேற்றினார். அந்த வீடியோ அமெரிக்க சலூன் காரர்களை கடும் கோபத்துக்கு ஆளாக்கியது.


சாதாரணமாக முடி வெட்டிக் கொள்வதற்காக நாம் எவ்வளவு தூரம் பயணம் செய்வோம்? ஒரு அமெரிக்கப் பெண், உள்ளூர் சிகையலங்கார நிபுணர் ஒருவர் தலைமுடியை வெட்டுவதற்கும், ப்ளீச் செய்வதற்கும் அதிக விலை கூறியதை அடுத்து, உலகம் முழுவதும் பயணம் செய்ய முடிவு செய்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?.

பிரைன் எலிஸ் என்கிற அந்தப் பெண் அமெரிக்காவில் உள்ள அவரது சொந்த ஊரில், தான் வழக்கமாக முடி வெட்டிக் கொள்ளும் சலூனுக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு முடி வெட்டி விட்டு பிளீச் செய்வதற்கும் சேர்த்து மொத்தம் $4,000 (இந்திய மதிப்பில் ரூ. 3.12 லட்சம்) கட்டணமாகக் கூறியிருக்கிறார்கள். இதனால் கோபமடைந்த பிரைன், அங்கே முடி வெட்டிக் கொள்வதற்கு பதிலாகத் துருக்கிக்குப் பறந்து சென்றிருக்கிறார்.

அதே சேவைகளுக்குத் துருக்கியில் $450 (ரூ 35,000) மட்டுமே செலவாகும். இதனால் அங்குள்ள சலூன் ஒன்றில் முன் அனுமதி வாங்கிய பிரைன் எலிஸ் 6,000 மைல்களுக்கு மேல் பயணம் செய்திருக்கிறார். இது சம்பந்தமாக அவர் டிக்டோக்கில் ஒரு வீடியோவை அவர் பதிவு செய்தார். அந்த வீடியோவில், விமானத்தில் ஏறுவது, முடி வெட்டுவது மற்றும் துருக்கியில் இரண்டு வார விடுமுறையைக் கழிப்பது போன்றவற்றை அவர் பதிவு செய்திருந்தார். இந்த விலையானது, தனது உள்ளூர் சலூனில் இருந்து பெற்ற சேவைக் கட்டணத்தை விட மிக மிகக் குறைவானது என்று அவர் கூறியிருக்கிறார்.

மேலும் வைரலான அந்த வீட்யோவில், “அமெரிக்காவில் நீங்கள் நினைப்பது போன்ற சிகையலங்காரம் செய்து கொள்ளச் செலவு செய்கிற பணத்தில், துருக்கியில் அதனை நிறைவேற்றிக் கொள்வதோடு சேர்த்து இரண்டு வாரங்கள் நிம்மதியாகத் தங்கி இருந்துவிட்டே வரலாம்” என்று எழுதியிருக்கிறார்.

பிரையனின் இந்த வீடியோவால் கோபமுற்ற அமெரிக்க சிகையலங்கார நிபுணர்கள் டிக்டாக்கில் அவரை வசைபாடி வருகிறார்கள்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!