இதுவரை இல்லாத புதிய கோணத்தில் இந்த கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட மனித உடலின் மிச்சம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதை காட்டுகிறது.
சுமார் 53 வருடங்களுக்கு முன்னர் கடந்த 1968-ம் ஆண்டு ஃபின்லாந்து நாட்டில் ஹட்டுலா நகராட்சியின் கீழ் இருக்கும், சுவான்டகா வெசிடோர்னின்மிக்கி என்ற பகுதியில் சில பைப்லைன் தொழிலாளர்கள் தண்ணீர் இணைப்பு குழாய் பதிப்பதற்காக குழி தோண்டினர். அப்போது அவர்களுக்கு வெண்கலத்தால் செய்யப்பட்ட வாள் ஒன்று கிடைத்தது. குழாய் ஹொழிலாளர்களின் வெண்கல வாள் கண்டுபிடிப்பு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை அப்பகுதிக்கு திருப்பியது. மேலும் இந்த சம்பவம்வரலாற்றாசிரியர் ஓய்வா கேஸ்கிடாலோ (Oiva Keskitalo) தலைமையில் ஒரு முழு அளவிலான தொல்பொருள் அகழ்வாராய்ச்சிக்கும் வழிவகுத்தது.
இந்த அகழ்வாராய்ச்சி பணியின்போது சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஒரு நபரின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட கல்லறையில் காணப்பட்ட பொருட்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு குழப்ப மற்றும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தின. கல்லறையின் புதைகுழியில் காணப்பட்ட நகைகள் புதைக்கப்பட்ட நபர் பெண் என்று கருதும் விதத்தில் உடையணிந்திருப்பதைக் குறித்தது. ஆனால் அதே சமயம் புதைக்கப்பட்டிருக்கும் நபர் ஆண் என்பதை வலுவாக எடுத்து கூறும் வகையில் அந்த கல்லறையில் 2 வாள்களும் காணப்பட்டன.
இதனை தொடர்ந்து கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 1000-ம் ஆண்டுகள் பழமையான அந்த கல்லறையின் முக்கியத்துவம் பற்றி தொடர்ந்து விவாதம் செய்து வருகின்றனர். ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட கல்லறையில் காணப்பட்டஆடை ஆபரணங்கள் மற்றும் வாள்களை வைத்து பார்க்கும் போது அது ஒரு பெண் வீரருக்கு சொந்தமானது என்று பரிந்துரைத்தனர். ஆனால் ஒரு சில ஆய்வாளர்கள் ஒரு பெண் மட்டுமே இந்த கல்லறையில் புதைக்கப்பட்டிருக்க முடியாது.ஒரு ஆண் மற்றும் பெண் இருவரையும் இந்த கல்லறை உள்ளடக்கியது என்று வாதிட்டனர்.
ஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வு முடிவு இதுவரை இல்லாத புதிய கோணத்தில் இந்த கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட மனித உடலின் மிச்சம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதை காட்டுகிறது. அதன்படி இந்த புதிய ஆய்வு கூறுவது என்னவென்றால் இந்த கல்லறையில் ஆணுமல்லாத, பெண்ணுமல்லாத பாலினத்தவர் (nonbinary) என்பதே. nonbinary என்பது ஆண் அல்லது பெண் இந்த இரண்டு வகைகளில் ஒன்றில் அடங்காத பாலினங்களை குறிப்பிட பயன்படுத்தும் ஒரு சொல். ஆண் அல்லது பெண் அல்லாத பாலின அடையாளங்களுக்கான ஒரு குடைச்சொல் தான் Non-binary.
இன்னும் சொல்வதென்றால் nonbinary நபர்கள், ஒரு குறிப்பிட்ட பாலினத்துடன் தங்களை அடையாளம் காண முடியாதவர்கள். ஆணும் இல்லை, பெணும் இல்லை என்பதை விவரிக்க பலவித சொற்களைப் பயன்படுத்தும் விதத்தில் nonbinary மிகவும் பொதுவான ஒன்று. இதனிடையே கல்லறையில் கண்டறியப்பட்ட மோசமாக சேதமடைந்த நபரின் DNA-வை மீண்டும் பகுப்பாய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், புதைக்கப்பட்ட நபருக்கு க்லைன்ஃபெல்டர் ( Klinefelter) நோய்க்குறி இருப்பதை கண்டறிந்தனர். இது ஒரு நபர் XXY குரோமோசோம்களுடன் பிறந்திருப்பதை வெளிப்படுத்துகிறது.
இதன்படி அந்த நபர் உடல் ரீதியாக ஆணாக பிறந்திருந்தாலும், X குரோமோசோம்களின் கூடுதல் நகல் இருப்பதால் இது மோசமாக செயல்படும் விந்தணுக்கள், மார்பக வளர்ச்சி மற்றும் கருவுறாமைக்கு காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் இந்த நோய்க்குறி இயற்கையாகவே குழந்தைகள் பெற்று கொள்ள முடியாத இயலாமை மற்றும் குறைந்த பாலியல் ஆசைக்கு வழிவகுக்கும்.
இந்த ஆய்வு குழுவில் ஒருவரான பேராசிரியர் உல்லா மொய்லானன் (Ulla Moilanen) கூறுகையில், கல்லறையில் புதைக்கப்பட்ட நபர் ஒரே பாலினம் மட்டும் பெற்றவர் இல்லை என்ற முடிவுக்கு தாங்கள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் அந்த நபரை புதைக்கும் போது அவருடனே புதைக்கப்பட்ட ஏராளமான பொருட்களை வைத்து பார்க்கும் போது அவர் சமூகத்தால் ஏற்று கொள்ளப்பட்டதையும், மதிப்பு மற்றும் மரியாதையை பெற்றுள்ளதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே உயிரியல் ஒரு நபரின் சுய அடையாளத்தை நேரடியாக பாதிக்காது என்பதை ஒருவர் மறந்து விட கூடாது என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
Comments
Post a Comment