நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் டைனோசர்களை அழித்த சிறுகோள் விபத்திலிருந்து தப்பித்த சுறாக்கள்!

 டிஎன்ஏ சேதத்தை சரிசெய்யும் சுறாக்களின் திறன் தான் அப்போது முதல் இன்று வரை அந்த இனம் செழித்து வளர உதவி செய்து வருகிறது.


மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன் மனித இனம் இருந்ததற்கான தடயங்கள் ஏதும் இல்லாத காலத்தில் நம் பூமியை டைனோசர்கள் போன்ற பிரமாண்ட உயிரினங்கள் ஆதிக்கம் செலுத்தின. இருப்பினும், கிரிடேசியஸ் காலத்தின் இறுதியில் பூமியை தாக்கிய ஒரு சிறுகோள், இங்கு வாழ்ந்த பெரிய உயிரினமான டைனோசர் வகைகளையும் அந்த சமயத்தில் பூமியில் வாழ்ந்த பெரும்பான்மையான உயிரினங்களையும அழித்தது. இந்த அழிவு நிகழ்வு கிரெட்டேசியஸ் காலம் மற்றும் மெசோசோயிக் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது.

கிரிடேசியஸ் காலம் என்பது 145.5 மற்றும் 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலம் என வரையறுக்கப்படுகிறது. இதனிடையே மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் மற்றும் பூமியின் பெரும்பான்மையான உயிர்களை அழித்த சிறுகோள் விபத்து, சுறாக்களை அழிக்காமல் விட்டுவிட்டது என்பதை பண்டைய பற்களின் புதிய பகுப்பாய்வின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஸ்வீடனின் உப்பல் பல்கலைக்கழக (Uppal University) விஞ்ஞானிகள் குழு நடத்திய புதிய ஆய்வில், டைனோசர்களை அழித்த பேரழிவு விபத்தின் போது சுறாக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி பிழைத்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் அந்த சிறுகோள் விபத்தில் டைனோசர்கள் அழிக்கப்பட்ட போது சுறாக்களின் பன்முகத்தன்மை பாதிக்கப்படவில்லை. சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மெக்சிகோ வளைகுடாவில் ஒரு நகரம் அளவிலான சிறுகோள் வந்து விழுந்துள்ளது. இந்த சிறுகோள் பூமியை தாக்கிய நிகழ்வில், டைனோசர்கள் உட்பட நிலம் மற்றும் நீரில் இருந்த பெரும்பாலான உயிர்கள் அழிந்துள்ளன.

இந்நிலையில் மரபணு வேறுபாட்டைக் காண சுறா பற்களை பகுப்பாய்வு செய்த புதிய ஆராய்ச்சி மூலம், மேற்சொன்ன பேரழிவு நிகழ்வில் அவை பாதிக்கப்படாமல் தப்பிய தகவல் தெரிய வந்துள்ளது. 83.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலிருந்து 56 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை உள்ளடக்கியதை கொண்ட மற்றும் தற்போது உயிருடன் உள்ள 8 மற்றும் ஒரு அழிந்து போன இனம் என 9 வெவ்வேறு இனங்களில் இருந்து 1,239 புதைபடிவ சுறா பற்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இதில் சிறுகோள் தாக்கும் முன் சில சுறா இனங்கள் அழிந்திருந்தன. இவை தவிர மற்றவை சிறுகோள் தாக்கிய விபத்திற்கு பிறகு வளரத் தொடங்கி இருந்தது கண்டறியப்பட்டது.

டிஎன்ஏ சேதத்தை சரிசெய்யும் சுறாக்களின் திறன் தான் அப்போது முதல் இன்று வரை அந்த இனம் செழித்து வளர உதவி செய்து வருகிறது. சுறாக்கள் குறைந்தது 450 மில்லியன் ஆண்டுகளாக இந்த பூபியில் இருந்து வருகின்றன. இதில் பெரிய வெள்ளை சுறாக்கள் மனிதர்களை விட வலுவான நோயெதிர்ப்பு அமைப்புகளை கொண்டுள்ளன. எனவே சுறாக்கள் பல கொடிய நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடி இவ்வளவு மில்லியன் ஆண்டு காலங்களாக இந்த பூமியில் நிலைத்து வருகின்றன.

மில்லியன் கணக்கான ஆண்டுகளாக அவை இந்த கிரகத்தில் இருப்பது அவர்களுக்கு உயிரின புதைபடிவத்தை வழங்கியுள்ளது. இவற்றின் நீண்ட ஆயுள் காரணமாக சுறாக்கள் ஆரய்ச்சியாளர்களால் 'உயிருள்ள புதைபடிவங்கள்' (living fossils) என்று குறிப்பிடப்படுகின்றன. சுறாக்கள் இதுவரை பல வெகுஜன அழிவுகளில் இருந்து தப்பித்துள்ளன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்