நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

புர்ஜ் கலிஃபாவில் திக் திக் நிமிடங்கள்..- உச்சியில் நின்ற பெண்.. வீடியோவை வெளியிட்ட எமிரேட்ஸ்!

எமிரேட்ஸ் விமானம் சார்பாக புதியதாக ஒரு விளம்பர படம் எடுக்கப்பட்டவிதம் தொடர்பாக அந்நிறுவனம் மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளது.
பிரபல விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ் எப்போதும் தன்னுடைய பாணியில் விளம்பர படங்களை எடுத்து வெளியிடும். அந்தவகையில் சமீபத்தில் ஒரு பெண் உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் மேல் எமிரேட்ஸ் ஊழியரை போல் வேடம் இட்டு நிற்பது போன்ற வீடியோ வெளியானது. அந்த விளம்பர வீடியோவை பலரும் கண்டு ரசித்தனர். அத்துடன் அந்த வீடியோ க்ரீன் மேட் போட்டு எடுக்கப்பட்டதாக இருக்கும். எப்படி புர்ஜ் கலிஃபாவின் மீது ஒரு பெண்ணை நிற்க வைத்து எடுக்க முடியும் அதுவும் ஒரு விளம்பர படத்திற்கு இப்படி செய்வார்களா என்று பலரும் கூறிவந்தனர். மேலும் புர்ஜ் கலிஃபாவில் பெண் நிற்பது போலி எனவும் தெரிவித்து வந்தனர். 


இந்நிலையில் மக்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அந்த் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த விளம்பரம் படம் எடுப்பதற்கு முன்பாக செய்யப்பட்ட ஏற்பாடுகளை விவரிக்கும் வகையில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அதன்படி 828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலிஃபாவின் மேல் ஸ்கை டைவிங் பயிற்சி அளிக்கும் பெண் ஒருவரை நிற்க வைக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர். அதற்காக அவர் நிற்பதற்கு என்று 1.2 மீட்டர் அகலம் கொண்ட ஒரு சிறிய இடத்தை ஏற்படுத்தியுள்ளனர். 


இதை கொண்டு புர்ஜ் கலிஃபாவின் 160ஆவது மாடிக்கு மேல் இருந்து உயரமான இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு செல்ல அவர்களுக்கு கிட்டதட்ட ஒரு மணி நேரம் எடுத்துள்ளது. அதன்பின்னர் விளம்பரம் படம் எடுக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அப்பெண்ணை அங்கு நிற்க வைத்துள்ளனர். அந்த வீடியோவில் எமிரேட்ஸ் நிறுவனம் உங்களை பல சுவாரஸ்யமான இடங்களுக்கு கூட்டி சென்றுள்ளது என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. 


புர்ஜ் கலிஃபாவில் நிற்கும் பெண் அங்கு சென்றவுடன், "உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் நான் நிற்கிறேன்" என மகிழ்ச்சியாக கூறுவதும் இந்த வீடியோவில் காட்சிகளாக வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் நிற்பதற்கு அப்பெண் சில நாட்கள் பயிற்சி எடுத்து கொண்டதாகவும் எமிரேட்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே புர்ஜ் கலிஃபாவின் உயரமான பகுதியில் நடிகர் டாம் குரூஸ், ஐக்கிய அமீரக மன்னர் முகமது பின் சல்மான் ஆகியோர் ஏறி நின்றுள்ளனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக இந்தப் பெண் அங்கு ஏறி நின்றுள்ளார். 


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்