ஒரே இரவில் கோடீஸ்வரன்: அபு தாபியில் லாட்டரியால் பண மழையில் நனைந்த இந்தியர்
- Get link
- X
- Other Apps
வளைகுடா நாட்டில் வாழும் இந்தியர் ஒருவரது தலைவிதி ஒரே இரவில் மாறியுள்ளது. அவருக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, 30 கோடி ரூபாய்க்கான வெகுமதி கிடைத்துள்ளது.
அபுதாபி: வளைகுடா நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரது தலைவிதி ஒரே இரவில் மாறியுள்ளது. அவருக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, 30 கோடி ரூபாய்க்கான வெகுமதி கிடைத்துள்ளது.
சிறிதும் எதிர்பாராமல் திடீரென கோடீஸ்வரர் ஆன அந்த நபரின் பெயர் சனூப் சுனில் (Sanoop Sunil) ஆகும். கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டுவது போல, கடவுள் திடீரென தன்னை இப்படி பண மழையில் நனைய வைத்திருப்பது பற்றி சுனிலாலேயே நம்ப முடியவில்லை. தொலைபேசியில் அவருக்கு இந்த தகவல் கிடைத்ததும், முதலில் தன்னை யாரோ கேலி செய்வதாக அவர் நினைத்தார். ஆனால் உண்மையை அறிந்தபோது அவரது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போனது.
இந்த வழியில் கோடீஸ்வரர் ஆனார்
கல்ஃப் டுடே அறிக்கையின்படி, அபுதாபியில் வசிக்கும் இந்தியரான சனூப் சுனில், 15 மில்லியன் திர்ஹம் (சுமார் ரூ. 30 கோடி) மதிப்பிலான பரிசுத்தொகையை (Prize Money) வென்றுள்ளார். அபுதாபியில் செவ்வாயன்று பிக் டிக்கெட் ரஃபள் டிரா தொடர் எண் 230-க்கான ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த குலுக்கலில் சுனில் வாங்கிய டிக்கெட்டுக்கு பரிசு கிடைத்து அவர் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆனார்.
லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, அமைப்பாளர்கள் சுனிலுக்கு அழைப்பு விடுத்தனர். அதிகாரிகள் சுனிலுக்கு பல முறை போன் செய்தனர். ஆனால், அவரை அமைப்பாளர்களால் போனில் பிடிக்க முடியவில்லை, அவரது போன் நம்பர் கிடைக்கவில்லை. மிகுந்த முயற்சிக்குப் பிறகு, அவரது தொலைபேசி கிடைத்த போதும், சில வினாடிகளிலேயே அந்த கால் துண்டிக்கப்பட்டது.
இருப்பினும், தான் ஜாக்பாட்டை வென்ற செய்தியை மட்டும் சுனிலால் கேட்க முடிந்தது. இதன் பிறகு சுனிலின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அவர் தனது குடும்பத்தினரிடம் இந்த நல்ல செய்தியை பகிர்ந்து கொண்டார். தான் குலுக்கலில் முப்பது கோடி ரூபாய் வென்றதாக கூறி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
மேலும் 9 வெற்றியாளர்கள்
ஜூலை 16 அன்று சுனில் டிக்கெட் வாங்கியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர் எண் 122225 மூலம் இதில் வென்றுள்ளார். 'தி பிக் டிக்கெட்', ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நீண்ட காலமாக இயக்கத்தில் இருக்கும் மற்றும் மிகப்பெரிய ரேஃபிள் குலுக்கல் என்பது குறிப்பிடத்தக்கது. சுனில் தவிர மேலும் 9 பேரும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
also read : உலகின் முதல் ஓவியன் நியாண்டர்தால் மனிதனா? ஆராய்ச்சியாளர்களின் அறிக்கை சொல்வது என்ன?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment