தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
உலகின் முதல் ஓவியன் நியாண்டர்தால் மனிதனா? ஆராய்ச்சியாளர்களின் அறிக்கை சொல்வது என்ன?
- Get link
- X
- Other Apps
மனித குலத்தின் பரிணாம மற்றும் நாகரீக வளர்ச்சி குறித்து எல்லோரும் கேள்விபட்டிருப்போம். அந்த வகையில் நாகரீக வளர்ச்சிக்கு முந்தைய கால கட்டத்தில் வாழ்ந்த ஆதி மனிதனான நியாண்டர்தால் மனிதர்கள் உலகின் முதல் ஓவியர்களாக இருந்திருக்க வாய்ப்பிருந்திருக்கலாம் என சொல்லும் விதமாக அமைந்துள்ளது Proceedings of the National Academy of Sciences வெளியிட்டுள்ள ஆய்வு இதழின் அறிக்கை.
ஸ்பெயின் நாட்டின் மால்கா பகுதியில் உள்ள Ardales குகையில் நியாண்டர்தால் மனிதர்கள் வரைந்த குகை ஓவியங்கள் இருக்கின்றன. இவை பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. அந்த குகையில் உள்ள ஓவியங்களில் நியாண்டர்தால் மனிதர்கள் சிகப்பு நிறமிகளை புற்று போல உள்ள குகைகளின் பாறைகளில் (Stalagmite) வைத்து பயன்படுத்தி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறமிகள் அனைத்தும் பல்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்டவை. அனைத்தும் இயற்கையான வண்ண பூச்சு காலவைகளை கொண்டிருப்பதாகவும் ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது.
இதனை சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர்கள் பயன்படுத்தி இருக்கலாம் என அந்த ஆய்விதழில் சொல்லப்பட்டுள்ளது.
மேலும், அந்த காலகட்டத்தில் நாகரீக வளர்ச்சி பெற்ற மனிதர்கள் வாசித்திருக்க வாய்ப்பில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது. இதையெல்லாம் அடிப்படையாக வைத்தே அந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
“இதன் முக்கியத்துவம் என்னவென்றால் அவர்கள் நம்மை போலவே வாழ்ந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட அவர்களது செயல்பாடுகளும் நம்மை போலவே இருந்துள்ளன. குகைகளில் ஓவியம் வரைந்திருப்பது அதற்கு மிகமுக்கிய சான்று” என தெரிவித்துள்ளார் Proceedings of the National Academy of Sciences-இல் ஆய்வு கட்டுரைகளை எழுதி வரும் Joao Zilhao.also read : 3700 ஆண்டுகள் பழமையான புராதன சின்னம் கண்டுபிடிப்பு.. கணித வரலாற்றின் முக்கிய மைல்கல்!
- Get link
- X
- Other Apps
Popular posts from this blog
முகத்தில் காணப்படும் அதிகபட்ச எண்ணெய்யை போக்க வேண்டுமா? இந்தவொரு பொருளை இப்படி பயன்படுத்தினாலே போதும்!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும். அதில் எண்ணெய் பசை சருமத்தினருக்கு சாதாரணமாகவே முகத்தில் எண்ணெய் வழிந்து கொண்டே இருக்கும். இதனால் பலரும் கோடைக்காலங்களில் பெரும் அவஸ்தைப்படுவதுண்டு. எ ண்ணெய் பசை சருமம் என்றால், அவர்கள் தங்களின் சருமத்தில் உள்ள எண்ணெய்யை அவ்வப்போது நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே இவற்றை ஆரம்பத்திலே நீக்குவது நல்லது. அதற்கு அரிசி மா பெரிதும் உதவியாக இருக்கின்றது. இதனை ஒரு சில பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்துவது நல்ல தீர்வினை தரும். தற்போது இதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம். அரிசிமாவுடன் மஞ்சள் தூள், காய்ச்சாத பசும் பால் சேர்த்து பேஸ்ட் போல் குழைக்கவும். இதை ஸ்ட்ரெச் மார்க் இருக்கும் இடங்களில் தடவி விடவும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். அரிசி மாவு 3 டீஸ்பூன், பன்னீர் 3 டீஸ்பூன் மற்றும் தயிர் 3 டீஸ்பூன் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் பேக் போடவும். பிறகு நன்கு மசாஜ் செய்து விடவும். அப்படியே உலரவிடவும். 30 நிமிடங்கள் கழித்த...
120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?
பாகிஸ்தானின் இந்த சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், ஒருபோதும் நோய்வாய்ப்படுவதில்லை. 120 வயது வாழும் மக்கள் இது பாகிஸ்தான் மக்களின் ஆரோக்கிய கதை 90 வயதிலும் குழந்தை பெறும் பெண்கள். ஒரு கிராமத்தில் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், அவர்களுக்கு நோய் ஏற்படுவதில்லை என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இது உண்மை தான். அதுவும், பிரச்சனைகள் அதிகம் இருக்கும் பாகிஸ்தானில்தான் அப்படியொரு ஊர் இருக்கிறது. வட பாகிஸ்தானின் ஹன்சா பள்ளத்தாக்கில் வசிக்கும் ஹன்சா சமூகத்தின் மக்கள் மீது பல வகையான ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. பாகிஸ்தான், தற்போது அரசியல் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காரணமாக அண்மை நாட்களில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர மற்றொரு சிறப்பு விஷயம் குறித்தும் பாகிஸ்தானின் பெயர் உலக அளவில் அடிபடுகிறது.. அதுதான் இங்கு குடியேறிய ஹன்சா சமூகத்தின் ஆரோக்கியம் அளிக்கும் ஆச்சரியமே விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஹன்சா சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கின்றனர் இன்று உலகம் முழுவதும் மனிதர்களின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது. ம...
கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?
பொதுவாக தொலைந்து போன ஸ்மார்ட்போனை ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஆப்பிள் Find my phone அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் Find your phone அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம். முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும். தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Your timeline' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய ...



Comments
Post a Comment