ஃபேஸ் பேக் அப்ளை செய்யும் முன் தங்களுக்கு சரியானது எது என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் தவறு ஏற்பட்டால், முக அழகு பாதிக்கும் என்பதால், பேஸ் மாஸ்க் தேர்ந்தெடுக்கும் முன்பும், பின்பும் செய்ய வேண்டியது என்ன என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
முக அழகை பராமரிப்பதில் அதீத கவனம் செலுத்தும் பெண்களின் நேரத்தை எளிமையாக்கும் வகையில் மேக்கப் கிட்டுகள் புதுமையாக வந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு பிளவேருக்கு ஏற்ற வகையில் பேஸ் மாஸ்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் இருக்கும் சவாலான விஷயம் என்னவென்றால், தங்களுக்கு சரியானது எது என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் தவறு ஏற்பட்டால், முக அழகு பாதிக்கும் என்பதால், பேஸ் மாஸ்க் தேர்ந்தெடுக்கும் முன்பும், பின்பும் செய்ய வேண்டியது என்ன என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
முகத்தை பிரெஷ்ஷாக வைத்திருக்க கிளீன்சர் மற்றும் மாய்ஸ்ரைசர் ஆகியவற்றை தேர்ந்தெடுக்க கொடுக்கும் முக்கியத்துவத்தை பேஸ் மாஸ்க்கை தேர்வு செய்வதிலும் கொடுக்க வேண்டும். தோலுக்கு ஏற்றவையாக இருப்பதை உறுதி செய்த பின்னரே அந்த பேஸ் மாஸ்கை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் தேவையற்ற அலர்ஜி மற்றும் தோல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முகத்தில் ஏற்படும் பிரச்சனைகள், அழகை கெடுத்துவிடும் என்பதால் கூடுதல் அக்கறைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க்கை தேர்ந்தெடுங்கள்.
சரியான பேஸ் மாஸ்க்கை தேர்ந்தெடுத்துவிட்டீர்கள் என்றால் அதனை உடனடியாக அப்ளை செய்ய வேண்டாம். பேஸ் மாஸ்க் அப்ளை செய்வதற்கு முன்பாக முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும். ஏற்கனவே கிளீன்சர் பயன்படுத்துபவர் என்றால் அதனை உபயோக்கிக்கலாம். இங்கும் நீங்கள் கவனிக்கவேண்டிய ஒன்று உள்ளது. கிளீசரும் உங்கள் முகத்துக்கு ஏற்றவையாக இருக்க வேண்டும். அந்த கிரீம் நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் ஃபேஸ் மாஸ்க்குக்கு ஏற்றவையாக இருக்க வேண்டும். பொருத்தமில்லாத இரண்டும் மிக்ஸாகும்போது முகத்தின் பொலிவு கிளாமராக இருக்காது.
முகத்தை சுத்தம் செய்வதற்கு முன்பு உங்களின் கைகளை மிகவும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கைகளால் எடுத்து பேஸ் மாஸ்க் மற்றும் கிளீன்சர்களை அப்ளை செய்வீர்கள் என்பதால், கைகளில் இருக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களும் முகப்பொலிவை கெடுத்துவிடும். மேக்கப் நன்றாக இருக்க வேண்டும் என ஆசைபடுபவர்கள் அனைவரும் இதனை சரியாக பின்பற்றுவார்கள். மேக்கப் போடுவதற்கு முன்பு கைகளை சுத்தமாக கழுவிக்கொள்ளுங்கள்.
முகத்தில் பேஸ் மாஸ்க்கை அப்ளை செய்த பிறகு, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் கால அளவில் மட்டும் முகத்தில் வைத்திருங்கள். கூடுதல் நேரங்கள் வைத்திருந்தாலும் எந்தவித பலன்களும் இருக்காது. கூடுதல் நேரம் இருந்தால் இன்னும் பொலிவு அதிகம் கிடைக்கும் என்ற எண்ணம் இருந்தால், அது தவறு. பேஸ் மாஸ்க்கில் கொடுக்கப்பட்டிருக்கும் பயன்படுத்தும் முறைகளை சரியாக படித்து, அதன்படி உபயோகியுங்கள்.
மேலும், பேஸ் மாஸ்க் இருக்கும் அளவில் மட்டும் அதனை அப்ளை செய்யுங்கள். அளவில் கூடுதலாக வேண்டும் என நினைத்து இழுக்க வேண்டாம்.
Comments
Post a Comment