நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

டைனோசர்கள் அழிந்தது எப்படி? வெளியான புதிய ஆதாரங்கள்

 சிறுகோள் ஒன்று பூமியைத் தாக்குவதற்கு முன்பே காலை நிலை மாற்றத்தால் டைனோசர்கள் அழிவை எதிர்கொண்டதாக புதிதாக வெளியான ஆய்வில் தெரிய வந்துள்ளது.


பூமியில் வாழ்ந்த டைனோசர்களைப் பற்றி பல தசாப்தங்களாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பு வெளியான பல ஆய்வுகளில் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சிறுகோள் ஒன்று பூமியை தாக்கியதால் டைனோசர்கள் முழுமையாக அழிவை சந்தித்ததாக கூறப்பட்டுள்ளது.

தற்போது புதிய ஆய்வு ஒன்று டைனோசர்களின் அழிவில் காலநிலைக்கும் பங்கு உள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. சிறுகோள் பூமியை தாக்கும் முன்பே, இங்கு நிலவிய கால நிலைகள் காரணமாக கணிசமான அளவில் டைனோசர்கள் அழிவை எதிர்கொண்டு வந்ததாகவும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

மான்ட்பெல்லியர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு விஞ்ஞானிகள், பிரிஸ்டல் பல்கலைக்கழகம், ஆல்பர்ட்டா பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து டைனோசர் வாழ்வியல் குறித்த ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வு ஜூன் 29 ஆம் தேதி நேச்சர் கம்யூனிகேஷன் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆறு குடும்பங்களைச் சேர்ந்த மூன்று தாவர டைனோசர்கள், மூன்று மாமிச டைனோசர்களை ஆய்வுக்குட்படுத்தினர். அதாவது, மாமிச டைனோசர்களான டைரனோசோரிடே (Tyrannosauridae), ட்ரோமேயோசரிடே (Dromaeosauridae) மற்றும் ட்ரூடோண்டிடே (Troodontidae) ஆகியவையும், தாவர டைனோசர்களான செரடோப்சிடே (Ceratopsidae), ஹட்ரோசரிடே (Hadrosauridae) மற்றும் அன்கிலோசரிடே (Ankylosauridae ) ஆகிய 6 டைனோசர்களை இந்த ஆய்வுக்குட்படுத்தினர்.

இது குறித்து எழுதியுள்ள மான்ட்பெல்லியர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஃபேபியன் காண்டமைன், சிறுகோள் வருகைக்கு முந்தைய 40 மில்லியன் ஆண்டுகளில் ஆய்வுக்குட்படுத்திய 6 டைனோசர் இனங்களும் ஆதிக்கம் செலுத்துபவையாகவும், பன்முகத்தன்மை கொண்டவையாகவும் விளங்கியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

டைனோசர்கள் குறித்த ஆய்வை தொடங்கியதில் இருந்து சுமார் 5 ஆண்டுகளுக்கு கிடைத்த அனைத்து தகவல்கள் மற்றும் ஆவணங்களை தொகுத்த அவர்கள், குறிப்பிட்ட காலத்தில் பூமியில் இருந்த டைனோசர்கள் எண்ணிக்கையையும், ஒரு குழுவில் இருந்த டைனோசர்கள் எண்ணிக்கையையும் அறிய முயற்சி செய்தனர்.

இதற்காக, புதை படிவங்கள், 250 க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த 1600 மாதிரிகளை சேகரித்துள்ளனர். பின்னர், சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் காலப்போக்கில் உருவான உயிரினங்களை கணக்கிடுவதற்காக புள்ளிவிவர மாதிரிகளையும் ஆய்வாளர்கள் உருவாக்கினர்.

இந்த மாதிரியில் 160 முதல் 66 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்ற மற்றும் இடையில் காணாமல்போன உயிரினங்களை கண்டறிந்த அவர்கள், அதன் மூலம் இனப்பெருக்க விதிகள், புதிய உயிரினங்களின் பரிணாமம், காலப்போக்கில் அழிந்த உயிரினங்கள் தகவல்களையும் மதிப்பீடு செய்தனர்.

இதனடிப்படையில், ஒரு புதிய தகவல்கள் அடங்கிய தொகுப்பை வெளியிட்ட அவர்கள், சிறுகோள் தாக்குதலுக்கு முன்பாக சுமார் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே டைனோசர் இனங்கள் அழிவை எதிர்நோக்க தொடங்கியதாக கூறியுள்ளனர். ஒரு பிராந்திய அளவில் மட்டுமல்லாமல் உலகளவில் அழிவை எதிர்கொள்ளத் தொடங்கியதாகவும், இந்த சரிவு மாமிச மற்றும் தாவரவகை டைனோசர்களை பாரபட்சமில்லாமல் பாதித்ததாக தெரிவித்துள்ளனர்.

சிறுகோள் தாக்குதலுக்கு 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்த டைனோசர்கள் அழிக்கப்படும் வரை உயிரினங்களின் எண்ணிக்கை கூர்மையான சரிவை எதிர்கொண்டது என்று ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.

ஆராய்ச்சியாளர்கள் இந்த சரிவு ஒரு பிராந்தியத்திற்கு மட்டுப்படுத்தப்படவில்லை, ஆனால் உலகம் முழுவதும் காணப்பட்டது என்று கூறுகின்றனர். இந்த சரிவு மாமிச மற்றும் தாவரவகை குழுக்களை பாதிக்கும் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!