இவை பறக்கும் பறவைகள் மட்டுமல்ல, பணக்கார கோடீஸ்வர புறாக்கள்
- Get link
- X
- Other Apps
புறாக்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்து இருக்கிறது என்பது ஆச்சரியம் தரும் செய்தியாக உள்ளது. புறாக்கள் என்ன வேலை செய்து சம்பாதித்தன? அவற்றின் பெயரில் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துக்கள் எப்படி வந்தன? இது ஒரு சுவாரஸ்யமான கதை.
சொத்து சேர்ப்பது என்பது மனிதர்களின் இயல்பு. விலங்குகளும் பறவைகளும் சம்பாதிப்பதும் இல்லை, சேர்ப்பதும் இல்லை. ஆனால், இந்த வழக்கம் மாறுவதை சொல்லும் வைரல் செய்தி இது.
இந்தப் புறாக்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்து இருக்கிறது என்பது ஆச்சரியம் தரும் செய்தியாக உள்ளது. புறாக்கள் என்ன வேலை செய்து சம்பாதித்தன? அவற்றின் பெயரில் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துக்கள் எப்படி வந்தன? இது ஒரு சுவாரஸ்யமான கதை.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜாஸ்நகரில் புறாக்களின் பெயரில் கடைகள், பல கிலோமீட்டர் வரை நீளும் நிலங்கள் மற்றும் பண வைப்புத் தொகை என பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் உள்ளன.
ராஜஸ்தானில் கோடீஸ்வரர்கள் மற்றும் கோடீஸ்வரர்களாக இருக்கும் பல தொழிலதிபர்களின் கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், புறாக்கள் கூட கோடீஸ்வரர்கள் என்பது அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கிறது.
புறாக்களின் பெயரில் 27 கடைகள், 126 பிகா நிலம் மற்றும் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரொக்க வைப்புத்தொகையும் உள்ளது., இந்த புறாக்களுக்குச் சொந்தமான 10 பிகா நிலத்தில் 400 மாடு பராமரிப்பு மையங்களும் இயங்குகின்றன.
இதன் பின்னணியில் வித்தியாசமான கதை உள்ளது. நான்கு தசாப்தங்களுக்கு முன்பு, ஒரு தொழிலதிபர் இங்கு புறாக்களுக்காக ஒரு அறக்கட்டளை (Kabutaran Trust) தொடங்கினார். சஜ்ஜன்ராஜ் ஜெயின் என்ற அந்த தொழிலதிபர், தனது முன்னோர்கள் மற்றும் முன்னாள் நகரத் தலைவர் ராம்தின் சோதியா மற்றும் அவரது குரு மருத கேசரி ஆகியோரிடமிருந்து உத்வேகம் பெற்று இந்த அறக்கட்டளையை தொடங்கியிருக்கிறார். அப்பாவி பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் ஏற்பாடு செய்ய திட்டம் தீட்டப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கு மக்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்தது. நன்கொடைகளும் தாராளமாக கிடைத்தது. இப்போது, 500 மாடுகள் தங்கியிருக்கும் மாடு பராமரிப்பு மையமும் புறாக்களுக்குச் சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கு தேவையான அனைத்து மருத்துவ ஏற்பாடுகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன.
புறாக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், பறவைகளுக்கு தேவைப்படும் தானியங்கள் மற்றும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும் சுமார் 27 கடைகளை இந்த அறக்கட்டளை நகரத்தில் கட்டியது.
புறாக்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இந்த அறக்கட்டளையின் பெயர் கபுதரன். தமிழில் இது புறாக்களின் அறக்கட்டளை என்று பொருள் கொள்ளலாம்.
27 கடைகளில் இருந்தும் மாதத்திற்கு 80,000 ரூபாய் வாடகை கிடைக்கிறது. அதோடு வாடகைக்கு விடப்பட்ட நிலத்தில் இருந்தும் வருமானம் வருகிறது. செலவுக்கு மிஞ்சிய வாடகைப் பணம் அனைத்தும் வங்கியில் வைப்புத்தொகையாக போடப்படுகிறது. அது மொத்தமாக 30 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்த அறக்கட்டளை கடந்த 30 ஆண்டுகளாக தினமும் மூன்று சாக்கு உணவு தானியங்களை புறக்களுக்கு வழங்கி வருகிறது. அதோடு, தங்கியிருக்கும் சுமார் 400 மாடுகள் தங்கும் அளவுக்கு மாடு பராமரிப்பு நிலையமும் உள்ளது.
பணக்கார புறாக்கள் டெபாசிட் வைத்திருக்கலாம், ஆனால் வருமான வரி கட்டுகிறதா? தெரியவில்லையே!
also read : 75th Independence Day:இந்தியாவைப் பற்றிய ஆச்சரியமான உண்மைகள்!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment