நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

75th Independence Day:இந்தியாவைப் பற்றிய ஆச்சரியமான உண்மைகள்!

 இந்தியா பல்வேறு கலாச்சாரங்கள், Twitter To Court After Violation: ராகுல் காந்தியின் பதிவை நீக்கினோம், கணக்கை முடக்கினோம்., மதங்கள் கொண்ட நாடு. மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழும் ஒரு மாறுபட்ட நிலப்பரப்பு.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்தியா தனது 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. நம் நாட்டின் மீது பிரமிப்பை ஏற்படுத்தும் அற்புதமான உண்மைகள் இவை... 


இந்தியாவில் நூற்றுக்கணக்கான மொழிகள் புழக்கத்தில் இருந்தாலும், இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டும் இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழிகள். உள்ளன. இங்கே அமெரிக்க ஆங்கிலம் பொதுவாகப் பேசப்படுகிறது. சுமார் 250 மில்லியன் மக்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள். 


கடந்த ஆண்டு கூகிள் ட்ரெண்ட்ஸின் தேடல் தரவின்படி, 2014 மற்றும் 2018 க்கு இடையில், உலகெங்கிலும் உள்ள மக்கள் சைவத்திற்கு திரும்புவதாக கூறுகிறது. நம் நாட்டில் லட்சக்கணக்கான அசைவ பிரியர்கள் இருந்தாலும், இந்தியா, உலகின் மிகப்பெரிய சைவ நாடு. உலகிலேயே அசைவம் சாப்பிடுபவர்களை விட சைவ உணவு உண்பவர்கள் அதிகம் கொண்ட நாடு இந்தியா. நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவிகிதம் சைவ உணவு உண்பவர்கள். அடுத்த இடத்தை பிடிக்கிறது இஸ்ரேல், அங்கு 13 சதவிகித மக்கள் சைவ உணவு உண்பவர்கள்.  


அனைத்து பெரிய மதங்களின் மக்களும் இந்தியாவில் வாழ்கின்றனர். உலகின் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் அமைதியாக வாழும் ஒரு பன்முக நாடு இந்தியா.


உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. தற்போது, இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 135 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதிகரித்து வரும் மக்கள்த்தொகையின் காரணமாக, இன்னும் சில ஆண்டுகளில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்திவிடும்.


பழமையான ஈட்டிகள் மற்றும் வில் மற்றும் அம்புகளுடன் ஆயுதம் ஏந்திய சென்டினலீஸ், வேட்டைக்காரர்கள் இந்தியாவில் இருக்கின்றனர். உலகின் கடைசி கற்காலத்திற்கு முந்தைய பழங்குடி இனம், மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட குழுவாக வாழ்கிறது. இவர்களின் எண்ணிக்கை சில டஜன் மட்டுமே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, பல தசாப்தங்களாக வெளி உலகத்துடன் தொடர்பு கொள்வதை தீவிரமாக எதிர்த்து வரும் பழங்குடியின மக்கள் இவர்கள். 1990 களின் முற்பகுதியில் மானுடவியலாளர்கள் பழங்குடியினருடன் ஓரளவு தொடர்பு கொண்டிருந்தனர், ஆனால் வெளி உலகத்துடனான தொடர்பால் இந்த அருகியிஅ பழங்குடியினருக்கு நோய்க்கிருமிகள் ஏற்பட்டு, பழங்குடி இனமே அழிந்துவிடும் என்பதால், அவர்களை வெளியுலகத்துடன் இணைக்கும் முயற்சி கைவிடப்பட்டது. அந்தமான் தீவுகளில் சுற்றுலா சென்றால், சென்டினலீஸ் மற்றும் சில பழங்குடியினரை புகைப்படம் எடுப்பதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மீறிய குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.


பழங்காலத்திலிருந்தே, இந்தியாவில் உலகின் மதிப்பு மிக்க வைரங்கள் இருந்தன. 1896 இல் தென்னாப்பிரிக்காவில் வைரங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை, இந்தியாவில் மட்டுமே வைரம் கிடைத்தது.


சில மாநிலங்களில், மீசை வைக்கவும், அவற்றை பராமரிக்கவும் காவல் துறை மீசைக்காக அலவன்ஸ்களை வழங்குகிறது.


இயற்கணிதம், முக்கோணவியல் மற்றும் கால்குலஸ் ஆகியவை இந்தியாவில் தோன்றின. 11 ஆம் நூற்றாண்டிலேயே ஸ்ரீதராச்சாரியர் இருபது சமன்பாடுகளை பயன்படுத்தினார்.



also read : ஒரே இரவில் கோடீஸ்வரன்: அபு தாபியில் லாட்டரியால் பண மழையில் நனைந்த இந்தியர்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!