உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
தற்போது உடல் எடை பிரச்சனையால் பெரியவர்கள் மட்டுமின்றி சிறியவர்கள் கூட பாதிக்கப்படுகின்றனர். இதனால் உடல் எடையை குறைக்க பல வழிகளை பின்பற்றுகின்றனர். ஆனால் உடல் எடையை குறைப்பது எளிதான காரியம் அல்ல. இது நீங்கள் சாப்பிடும் உணவு மற்றும் நாள் முடிவில் எவ்வளவு கொழுப்பு எரிக்கப்படுகிறது என்பதை பொறுத்து அமைகிறது. நீங்கள் எடையை குறைக்க முடிவு செய்தால் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். ஆனால் சில நாட்களுக்கு பின்னர் அவற்றை சரியாக பின்பற்ற முடியாத நிலை ஏற்படும் போது குற்றஉணர்ச்சியாக இருப்பீர்கள். எனவே உடல் எடையை குறைக்க முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.சரியான உணவைத் தேர்ந்தெடுங்கள் : நீங்கள் உங்கள் எடையை குறைக்க விரும்பினால் முதலில் அன்றாடம் உங்கள் உணவு பட்டியலில் கவனம் செலுத்த வேண்டும். சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடவில்லை என்றால், உங்கள் உடலில் கலோரிகள் அதிகரிக்கும், இதனால் அதிகப்படியான உணவை சாப்பிட்டோம் என்ற குற்ற உணர்வு ஏற்படும். எனவே இதனை தவிர்க்க ஆரோக்கியமான மற்றும் நீரேற்ற உணவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். இதற்கு பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை உங்கள் அன்றாட உணவு பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள். இவற்றில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் செரிமான பிரச்சினைகளைத் தடுத்து உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள் வேண்டாம் :
நீங்கள் உடல் எடையை குறைக்க முடிவு செய்தால் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது. அதே நேரத்தில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என பல்வேறு வகைகள் இருப்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இவற்றில் நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். இதனால் எவ்வித பிரச்சனைகளும் இல்லை. இதேபோல் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் உங்கள் கொலஸ்ட்ரால் அளவை சரியாக பராமரிக்கவும் உதவுகிறது. மேலும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளை அறவே தவிர்த்து விடுவதும் நல்லது.
நிறைய தண்ணீர் குடிக்கவும் : நீரேற்றத்துடன் இருப்பது ஆரோக்கியமான உடலுக்கு அவசியமானதாகும். நமது உடல் சீராக இயங்கவும், தீங்கு விளைவிக்கும் நோய்களிலிருந்து நமது ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும் தண்ணீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம். இது நீண்ட காலத்திற்கு உங்கள் பசியை கட்டுப்படுத்தும், மேலும் கூடுதல் கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது.
நீங்கள் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சாப்பிட விரும்பினால் உடற்பயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளுக்கும் முன்னுரிமை அளிப்பது மிகவும் முக்கியம். நீங்கள் எதைச் சாப்பிடுகிறீர்கள், எதை ஒதுக்கி வைக்கிறீர்கள் என்பதற்கு இடையே ஒரு சமநிலை இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் உணவில் சமரசம் செய்ய விரும்பவில்லை, அதே நேரத்தில்ஆரோக்கியமான எடையை பராமரிக்க விரும்பினால், உடற்பயிற்சி முக்கியம். எனவே தினமும் உங்களால் முடிந்த எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம்.
நொறுக்குதீனிகள் வேண்டாம் : உடல் எடையை குறைக்கும் பயணத்தில் நாம் செய்யக்கூடிய மிக மோசமான விஷயம் என்னவென்றால் நொறுக்குதீனிகள் சாப்பிடுவது தான். ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை சாப்பிடுவதும், பின்னர் நாள் முழுவதும் வருத்தப்படுவதும் ஒரு சிலர் பழக்கமாகவே வைத்துள்ளனர். அதற்கு பதிலாக நீங்கள் ஆரோக்கியமான தின்பண்டங்களை சாப்பிடலாம். சில ஆரோக்கியமான தின்பண்டங்களில் நட்ஸ், பாப்கார்ன், பெர்ரி, முழு தானிய உணவுகள் மற்றும் காய்கறி சாலடுகள் ஆகியவை அடங்கும். இவற்றை அவ்வப்போது சாப்பிடலாம்.
Comments
Post a Comment