நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆழ்கடலில் ஜெல்லிமீனின் அரியவகை இனம் கண்டுபிடிப்பு - வைரல் வீடியோ!

 நீருக்கடியில் பள்ளத்தாக்கின் நீர் நெடுவரிசை சுறுக்கப்பட்டிருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


பூமியின் ஒரு அங்கமாக விளங்கும் பெருங்கடலில் எண்ணற்ற அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிறைந்துள்ளன. இன்னும் கண்டறியமுடியாத சில மர்மங்களும் ஆழ்கடலில் நிகழ்ந்து வருகிறது. மேலும், நாம் இன்னும் பார்த்திராத அறிய வகை உயிரினங்கள் பல ஆழ்கடலில் வாழ்ந்து வருகின்றன.

தற்போது கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் மூலம் சில அரியவை உயிரினங்கள் குறித்து நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. அந்தவகையில், ஜெல்லிமீன் வகையை சேர்ந்த அரிய உயிரினத்தின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இந்த ஜெல்லிமீன் ஒரு டிஸ்க் வடிவில் இருந்தது ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்துள்ளது. சிவப்பு நிற ஜெல்லிமீன் கடலின் மேற்பரப்பில் இருந்து கிட்டத்தட்ட 2,300 அடி ஆழத்தில் மிதந்து கொண்டிருந்தது. வடக்கு அட்லாண்டிக் ஸ்டெப்பிங் ஸ்டோன்ஸ் பயணத்தின் ஒரு பகுதியாக ஆராச்சியாளர்கள் ஆழ்கடலில் பயணம் மேற்கொண்ட போது இந்த மீன் கேமராவில் படம் பிடிக்கப்பட்டது. இந்த வகை இனங்கள் இதற்கு முன்னதாக இருந்தது என்பதற்கான பதிவுகள் இதுவரை இல்லை என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சமீபத்தில், தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) ஆய்வாளர்கள் நீருக்கடியில் உள்ள பள்ளத்தாக்கில் டைவ் சென்றதை விவரிக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். ஆய்வின் போது அவர்கள் கண்ட ஜெல்லிமீன் குறித்தும் NOAA விஞ்ஞானிகள் குறிப்பிட்டிருந்தனர். அந்த மீன் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்து கொண்டிருந்த மலர் இதழ் போன்று இருந்ததாக விவரித்தனர். இந்த வகை மீன் பொராலியா இன வகையை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

இந்த டைவ் அறிக்கையை NOAA அமைப்பு கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியிட்டது. மேலும் நீருக்கடியில் பள்ளத்தாக்கின் நீர் நெடுவரிசை சுறுக்கப்பட்டிருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடல் நீரின் பண்புகளை நன்கு வரையறுக்கப்பட்ட புவியியல் புள்ளியின் தனித்துவமான ஆழத்தில் விவரிக்கப் பயன்படுத்தப்படும் கடல் கோட்பாட்டின் ஒரு கோட்பாடு தான் நீர் நெடுவரிசை ஆகும்.

டைவின் போது ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்திய டீப் டிஸ்கவர் என்ற தொலைதூரத்தில் இயங்கும் வாகனம் (ROV) சுமார் 650-க்கும் மேற்பட்ட வெவ்வேறு உயிரினங்களை படம்பிடித்ததாக கூறப்படுகிறது. அதில் தான் இந்த புதிய வகை ஜெல்லிமீன்களும் பதிவாகியுள்ளன. இது முற்றிலும் ஒரு புதிய வகை ஜெல்லிமீன்களாக இருக்க வாய்ப்பு இருப்பதாக NOAA ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். டீப் டிஸ்கவரர் 3.7 மைல் (6,000 மீட்டர்) ஆழத்திற்கு மூழ்கும் தன்மைக்கொண்டது. மேலும் உயர் வரையறை காட்சிகளைப் பதிவு செய்யும்.

மறுபுறம், NOAA பெருங்கடல் ஆய்வில் ஈடுபட்ட NOAA ஹோலிங்ஸ் ஸ்காலரான குயின் கிராசெக், 2021 வடக்கு அட்லாண்டிக் ஸ்டெப்பிங் ஸ்டோன்ஸ் பயணத்தின் டைவ் 20 ஆய்வின் மூன்றாவது கட்டத்தின் போது சுமார் 700 மீட்டர் (2,297 அடி) ஆழத்தில் காணப்படும் நீர் நெடுவரிசையில் உள்ள உயிரினங்களை குறிப்பு எடுத்து வந்துள்ளார். அப்போது தான் இந்த அதிசய உரியினத்தை கண்டறிந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் பேசியதாவது, "ஒரு ஹாலிங்ஸ் பயிற்சியாளராக, முன்னர் ஆராயப்படாத கடல் வாழ்விடங்களைப் பற்றிய நமது புரிதலை மேலும் அதிகரிக்க நான் ஆராய்ச்சி நடத்துகிறேன். எனது ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக பட்டியலிடப்பட்ட உயிரினங்களில் ஒன்று தற்போது கண்டுபிடித்த சிவப்பு ஜெல்லிமீன்" என்றும் விளக்கம் அளித்துள்ளார்.


ALSO READ :

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்