ஒளிரும் கடல்களின் மர்மத்தை அறியும் ஆராய்ச்சி; ஆச்சரியம் அளிக்கும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்
- Get link
- X
- Other Apps
2019ம் ஆண்டு தெற்கு ஜாவா அருகே இருந்த ஒளிரும் நுண்ணுயிர்கள் வாழும் பகுதி, வெர்மோண்ட், நியூ ஹாம்ப்ஷிர், மாசசூசெட்ஸ், ரோட் தீவு மற்றும் கனெக்டிகட் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதிகளை விட பெரியதாக வளரும் என்று கூறியுள்ளனர்.
பெருங்கடல்கள் எப்போதும் ஒளிரும் தன்மை கொண்டவை. கிரேக்கர்களும் ரோமானியர்களும் ஒளிரும் கடல் உயிரினங்கள் பற்றியும், கடல் நீரின், பச்சை – நீல நிறங்களில் ஒளிரும் பொதுவான தன்மை குறித்தும் அறிந்திருந்தனர்.
சார்லஸ் டார்வின், எச்.எம்.எஸ். பீகிளில் தெற்கு அமெரிக்கா அருகே, ஒரு இருண்ட இரவில் பயணம் செய்த போது ஒளிரும் அலைகளை எதிர்கொண்டார். ஒரு அற்புதமான, அழகான காட்சி அது என்று அவர் அதனை வர்ணனை செய்ததுண்டு. கண்ணுக்கு தெரிந்த வரை, ஒவ்வொரு அலையின் முகடும் மிகவும் பிரகாசமாக இருந்தது என்றும், அந்த வெளிரிய நீல நிறத் தீப்பிழம்புகள் வானத்தையும் ஒளிரச் செய்தது என்றும் அவர் கூறினார்.
தற்போது ஆராய்ச்சியாளர்கள், இந்த ஒளிரும் நுண்ணுயிரிகள் மிகவும் தீவிரமானதாகவும், பெரிய அளவில் இருக்கும் என்றும் கூறுகின்றனர். 500 மைல்கள் உயரத்தில் சுற்றி வரும் செயற்கைக் கோள்கள் வழியே பார்க்கும் போது ஒளிரும் நுண்ணுயிர்களால் ஆன பாய்கள் கடல் மீது போர்த்தப்பட்டிருப்பது போன்று இருக்கும் என்று தெரிவிக்கின்றனர். கடந்த மாதம் சயன்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில், 8 ஆராய்ச்சியார்கள், 2019ம் ஆண்டு தெற்கு ஜாவா அருகே இருந்த ஒளிரும் நுண்ணுயிர்கள் வாழும் பகுதி, வெர்மோண்ட், நியூ ஹாம்ப்ஷிர், மாசசூசெட்ஸ், ரோட் தீவு மற்றும் கனெக்டிகட் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதிகளை விட பெரியதாக வளரும் என்று கூறியுள்ளனர்.
“இது ஒரு எபிபானி” என்று உயிரியக்கவியல் ஆய்வின் முதன்மை எழுத்தாளரும் கொலராடோ மாநில பல்கலைக்கழகத்தின் செயற்கைக்கோள் கண்காணிப்பு நிபுணருமான ஸ்டீவன் டி. மில்லர் கூறினார். இயற்கையின் ஒரு மறைக்கப்பட்ட அதிசயம் வெளிச்சத்திற்கு வரும் போது உங்களின் கற்பனையை கட்டிப்போடுகிறது என்று அவர் கூறினார்.
டிசம்பர் 2012 முதல் மார்ச் 2021 வரையிலான காலகட்டத்தில் இரண்டு செயற்கைக் கோள்களில் இருந்து பெறப்பட்ட புகைப்படங்களை நுணுக்கமாக ஆராய்ச்சி செய்தால் ஒரு டஜன் மிகப்பெரிய நிகழ்வுகளை நம்மால் அடையாளம் காண முடியும். ஏறக்குறைய எட்டு மாதங்களுக்கு ஒரு முறை இந்நிகழ்வு நடைபெறுகிறது. மிகச்சிறிய அளவிலான ஒளிரும் நிகழ்வுகள் கூட மான்ஹாட்டனை விட நூறு மடங்கு பெரியதாக இருக்கும் என்கின்றனர் இந்த ஆராய்ச்சியாளர்கள்.
இந்த புகைப்படங்கள் கடல்சார் ஆராய்ச்சிகளில் புதிய பக்கத்தை திறக்கிறது. மேலும் இந்த நிகழ்வுகளின் தோற்றம் இன்னும் சரியாக புரிந்து கொள்ளப்படாத நிலையில் ஒளிரும் கடல்களைக் கண்காணிப்பதற்கும் ஆய்வு செய்வதற்கும் இப்புகைப்படங்கள் உதவியாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கென்னத் எச். நீல்சன், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உயிரியக்கவியல் ஆராய்ச்சியின் முன்னோடி, இந்த கண்டுபிடிப்பு கடலின் நீடித்த மர்மத்தை புரிந்து கொள்ள ஒரு மிக முக்கியமான முன்னெடுப்பு என்று கூறினார்.
உயிருள்ள ஒளிரும் நுண்ணுயிரிகளின் செறிவானது நீண்ட கால அறிவியல் ஆராய்ச்சியை புறந்தள்ளிவிட்டது. இதுவரை அவற்றின் கலவை, உருவாக்கம் மற்றும் கடல் சுற்றுச்சூழலில் அதன் பங்கு என்பதைப் பற்றி சிறிய அளவு தான் அறியப்பட்டுள்ளது என்று புதிய ஆய்வறிக்கை அறிவித்துள்ளது.
கடல் பயோலுமினென்சென்ஸ் பெரும்பாலும் கடலின் மை நிற ஆழத்தில் வசிக்கும் உயிரினங்களுடன் தொடர்புடையது. ஊசி போன்ற பற்களுக்கு முன்பு பிரகாசமாக ஒளிரும் அமைப்பை கொண்ட ஆங்லர்ஃபிஷ் இதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும். இதற்கு நேர்மாறாக, பல டிரில்லியன் கணக்கான சிறிய பாக்டீரியாக்கள் ஒன்றாக ஒளிரும் போது ஒளிரும் கடல்கள் தோன்றுகின்றன.
செயற்கைக்கோள் ஆராய்ச்சியில் ஈடுபடாத நீல்சன் மற்றும் சகாக்கள் 1970ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஒரு குறிப்பிட்ட பாக்டீரியாக்களின் இடைநீக்கங்கள் நீர்த்துப் போகச் செய்யும் போது ஒளிர்ந்தது என்றும், அதே நிகழ்வு பெரிய அளவில் அரங்கேறும் போது ஒரு சுவிட்சை தட்டியது போன்று நுண்ணுயிர்கள் ஒளிரத் துவங்கும் என்று குறிப்பிட்டுள்ளனர். தற்போது பளபளக்கும் பாக்டீரியாக்கள் மீன்களை ஈர்க்கிறது என்று கூறுகின்றனர். இப்பாக்டீரியாக்கள் வாழ ஊட்டச்சத்தான வாழ்விடங்கள் மீன்களின் குடல்பகுதிளாக உள்ளது.
மில்லரின் கண்டுபிடிப்பானது 20 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து துவங்குகிறது. செயற்கை கோள்கள் வழியே கடல் ஒளிர்வதை பார்க்க முடியுமா என்று விளையாட்டாக பேசிய நாளில் இருந்து அவை துவங்குகிறது. . 2004ஆம் ஆண்டில் கலிபோர்னியாவின் மான்டேரியில் உள்ள அமெரிக்க கடற்படை ஆராய்ச்சி ஆய்வகத்தில் பணிபுரியும் போது, அவர் வானிலை செயற்கைக்கோளிலிருந்து படங்களை ஆராயத் தொடங்கினார். விரைவில், அவர் வடமேற்கு இந்தியப் பெருங்கடலில் கனெக்டிகட் அளவுக்கு ஒளிரும் பகுதிகள் உருவாகியதை கண்டார்.
மங்கலான பகுதி அரிதாகவே தெரியும், ஆனால் மில்லரும் அவரது சகாக்களும் மிகவும் உற்சாகமாக ஆராய்ச்சியை மேற்கொண்டனர். ஏனென்றால் ஒரு புதிய தலைமுறை செயற்கைக்கோள் சென்சார்கள் விரைவில் அதிக உணர்திறன் மற்றும் கூர்மையை வழங்கும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். மேம்படுத்தப்பட்ட சென்சார்கள் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தால் (National Oceanic and Atmospheric Administration ) 2011 மற்றும் 2017ம் ஆண்டு அனுப்பப்பட்ட செயற்கைக் கோள்களில் பொருத்தப்பட்டது.
உணர்திறன் அதிகம் கொண்ட டிடெக்டர்கள், குறைந்த பட்சம் அதிக இருண்ட இரவுகளில், கடலில் ஒளிரும் பகுதியை புகைப்படம் எடுப்பதில் சிறந்தவை என்று நிரூபித்ததோடு, தற்போதைய ஆராய்ச்சிகளுக்கு தேவையான புகைப்படங்களையும் வழங்கியுள்ளது.
இந்த நிகழ்வுகள் நீண்ட காலத்திற்கு நடைபெறும் என்று மில்லர் கூறினார். 2019ம் ஆண்டு ஜாவாவில் தோன்றிய பெரிய ஒளிரும் நிகழ்வு கிட்டத்தட்ட 45 நாட்கள் நீடித்தது. கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் விரைந்து மாதிரிகளை சேகரிப்பதற்கும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் தேவையான நேரத்தை இவை வழங்குகின்றன என்று அவர் கூறினார்.
இன்று வரை எந்த ஆராய்ச்சிக் குழுவும் இதில் வெற்றி அடையவில்லை. இயற்கை ஆவணப்படங்களை உருவாக்கும் தொலைக்காட்சி நிறுவனங்கள் செயற்கைக்கோள் கண்டறிதல்களைப் பயன்படுத்தி ஒளிரும் கடல்களைக் கண்டறிந்து படம்பிடிக்க ஆர்வம் காட்டியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
ஒளிரும் நுண்ணுயிர்களின் ஆராய்ச்சிக்காக அறியப்பட்ட பிரிட்டிஷ் கடல் உயிரியலாளர் பீட்டர் ஹெர்ரிங், செயற்கைக் கோள் படங்கள் மிகவும் முக்கியமானவை. ஏன் என்றால் பல வருட நிச்சயமற்ற நிலைக்கு பிறகு, அது இறுதியாக ஒளிரும் சுழல்களுக்கு என்ன சக்தி இருக்கிறது என்பதற்கான கடினமான ஆதாரங்களுடன் வரும் வாய்ப்பை எழுப்பியது என்று கூறினார்.
ALSO READ : அழிந்து போனதாக கருதப்பட்ட மிகச்சிறிய பச்சோந்தி; 37 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடமாட்டம்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment