சீனாவைச் சேர்ந்த பெண் அங்குள்ள தமிழ்த்துறை மாணவர்களுக்கு கீழடியைப் பற்றி பாடமெடுத்து வருகிறார்.!
- Get link
- X
- Other Apps
தமிழர்களின் பெருமைகளில் ஒன்றான கீழடி அகழாய்வு மற்றும் தமிழர்களின் வரலாற்று பெருமைகளை சீனாவைச் சேர்ந்த நிறைமதி கிக்கி ஜாங் (Niraimathi kili Zhang) தமிழ் துறை மாணவர்களுக்கு பாடம் எடுத்துவருகிறார்.!
சிந்து சமவெளி நாகரிகம் தான் இருப்பதிலேயே மிகப் பழமையான நாகரிகம் என்று நாம் எல்லோரும் நம்பி வந்த நிலையில் இல்லை அதற்கும் மேலாக கீழடி (Kizhadi) நாகரிகம் ஒன்று தமிழகத்தில் "வைகை நதிக் கரையோரம் தோன்றியிருக்கிறது. அதுவும் சுமார் "2,000 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகம் இங்கு சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் நமக்கு தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளன.
"அள்ள, அள்ள குறையாத அட்சயப் பாத்திரம் கிடைப்பது போல தோண்ட,தோண்ட தினந்தோறும் எண்ணற்ற தொல்லியல் பொருட்கள் கிடைக்கின்றன.முதலாம் கட்ட அகழாய்வு முதல் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 7ஆம் கட்ட அகழாய்வு வரை கீழடியில் 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வுகளில் சங்க கால மக்களின் "எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.
சங்ககால இலக்கிய பாடல்களான சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி, போன்ற பாடல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் தாயக் கட்டைகள், சிறு குழந்தைகள் விளையாடிய சுடுமண் பொம்மைகள், பெண்கள் விளையாடிய சில்லு, சதுரங்க காய்கள் போன்ற பொருட்கள் தோண்டத், தோண்ட ஒவ்வொரு நாளும் கிடைத்து வருகின்றது.
தமிழக அரசும் கீழடி பகுதியை "திறந்தவெளி அருங்காட்சியமாக செயல்படும் என அண்மையில் அறிவித்தது. இப்படி நாள்தோறும் கீழடியில் எண்ணற்ற தொல்பொருட்கள் கிடைத்து வருகின்றது.
இந்நிலையில் சீனாவில் (China) உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை மாணவர்களுக்கு (Tamil department Students) நம் தமிழர்களின் பெருமைகளில் ஒன்றான கீழடி அகழாய்வு மற்றும் தமிழர்களின் வரலாற்று பெருமைகளை சீனாவைச் சேர்ந்த நிறைமதி கிக்கி ஜாங் (Niraimathi kikki Zhang) அங்குள்ள மாணவர்களுக்கு பாடம் எடுத்துவருகிறார். "இதனை தன்னுடைய முகநூல் (Facebook) பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார்.
"தமிழர்களுக்கும், சீன மக்களுக்கும் இன்று மட்டும் அல்ல! சங்க காலம் தொட்டே தொடர்பு இருந்ததற்கான சான்றுகள் இருந்துள்ளது! என பல வரலாற்று ஆய்வாளர்களும்,தொல்லியல் ஆய்வாளர்களும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது ஆகும். இப்போது இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.!!
ALSO READ : யானைக்கு உணவூட்டும் வயதான பாட்டி - மனதை நெகிழ வைக்கும் வீடியோ
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment