நியூயார்க்கில் கார் எஞ்சினில் சிக்கிய பூனையை மீட்ட அதிகாரி - நெட்டிசன்கள் பாராட்டு!
- Get link
- X
- Other Apps
இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில், கிழக்கு கான்ட்ரா கோஸ்டா பகுதியில் ஒரு தாய் அவரது குழந்தையுடன் வந்து கொண்டிருந்த போது ஒரு காருக்குள் பூனை குட்டிகள் சத்தம் போடுவதை அறிந்து தீயணைப்புதுறைக்கு தகவல் அளித்தனர்.
நியூயார்க்கின் ரமாபோவில் உள்ள காவல்துறை அதிகாரிகள் கார் என்ஜின் பெட்டியில் சிக்கியிருந்த பூனையை பத்திரமாக மீட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரமாபோ காவல் துறையின் கூற்றுப்படி, பூனைக்குட்டி சிக்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து உடனடியாக இரண்டு காவல்துறை அதிகாரிகள் மற்றும் நாய் கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, வாகனத்தில் இருந்த பூனைக்குட்டியை பாதுகாப்பாக காவல்துறையினர் மீட்டு கொண்டு வந்துள்ளனர்.
இந்த புகைப்படங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யப்பட்டது. மேலும் காரின் உள்ளே சிக்கியிருந்த பூனையை மீட்டது குறித்த வீடியோவை காவல்துறையினர் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ஷேர் செய்துள்ளனர். இந்த வீடியோ நெட்டிசன்கள் கவனத்தை பெற்ற நிலையில் தற்போது வைரலாகி வருகிறது. ரமாபோ காவல்துறையின் முயற்சிகளுக்கு அனைவரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அந்த பதிவில் இந்த சம்பவம் குறித்து அந்த பதிவில் விளக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை வயோலா ஆர்டில் உள்ள ஒரு வீட்டிற்கு அருகே இருந்த காரின் எஞ்சின் பெட்டியில் பூனைக்குட்டி சிக்கியதாக புகார் வந்தது. இதனையடுத்து காவல்துறை அதிகாரி ஜெனிடோ, அதிகாரி சிம்ப்சன் மற்றும் நாய் கட்டுப்பாட்டு அதிகாரி மெக்ராத் ஆகியோர் அங்கு விரைந்து பூனையை மீட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில், கிழக்கு கான்ட்ரா கோஸ்டா பகுதியில் ஒரு தாய் அவரது குழந்தையுடன் வந்து கொண்டிருந்த போது ஒரு காருக்குள் பூனை குட்டிகள் சத்தம் போடுவதை அறிந்து தீயணைப்புதுறைக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்களால் உடனடியாக அங்கு செல்ல முடியாததால் கான்ட்ரா கோஸ்டா கவுண்டி விலங்கு சேவைகள் துறைக்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்தனர். இதன் பின்னர் அங்கு விரைந்த அதிகாரிகள் கார் எஞ்சினில் தேடியுள்ளனர். ஆனால் சத்தம் மட்டும் கேட்ட நிலையில் எஞ்சினில் சில பகுதிகளை கழட்டி பார்த்துள்ளனர். அப்போது அங்கு ஐந்து பூனைக்குட்டிகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அதில் இருந்த பூனைக்குட்டிகளை மீட்டு கொண்டுவந்துள்ளனர்.
இதனிடையே சமீபத்தில் பூனை ஒன்றின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கின்னஸ் சாதனை பக்கம் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாயும், பூனையும் இணைந்து பல்வேறு சேட்டைகளை செய்கின்றன.சுமார் 5 நிமிடம் இருக்கும் அந்த வீடியோவில், பூனையுடன் இணைந்து நாய் பொம்மை ஸ்கூட்டரை நீண்ட தூரத்துக்கு ஓட்டிச் செல்கிறது. பின்னர், ஸ்கூட்டர் மீது பூனை இருக்கும்போது, நாய் அதனை தள்ளிக்கொண்டு ஓடுகிறது. இது பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ALSO READ : திக் திக் 45 நிமிடங்கள்! மீண்டும் உயிருடன் வந்த பெண்!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment