நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முக்கால் வாய்பாடு கேள்வி பட்டதுண்டா? - வைரலாகும் தாத்தாவின் வீடியோ

 மிகவும் பிரமிப்பு கணித தாத்தா எனவும், தெய்வமே,,உங்கள் கால் தொட்டு,,வணக்கம், எனக்கு தலைசுற்றி விழுந்து விட்டேன் என பலரும் ஆச்சர்யத்தில் உறைந்து போய் உள்ளனர்.

ஒன்றாம் ஆம் வாய்பாடு, 2 ஆம் வாய்பாடு கேட்டிருப்போம். ஆனால், ¼, - ¾. வாய்பாடு கேள்வி பட்டதுண்டா? இந்த வீடியோவை பாருங்கள் பிரமித்து போவீர்கள் எனும் தலைப்பில் முகநூலில் வயதான முதியவர் ஒருவரின் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், தாத்தாவின் திறமையை அனைவரும் அறிய வீடியோ எடு என ஒருவர் பின்னர் பேசுகிறார். பின்னர் குழந்தைகள் சிலர் தாத்தா சொல்லுங்க என கூற தாத்தாவோ உடனே குழந்தைகளின் பேச்சுக்கு செவி மடுத்து பேசத் தொடங்குகின்றார். அதில் கால் வாய்ப்பாடு , அரை வாய்ப்பாடு , முக்கால் வாய்ப்பாடு என சரளமாக வாய்ப்பாட்டினை கூறுகின்றார்.

இந்த மாதம் 13ம் தேதி முகநூலில் பதிவிட்டுள்ள இந்த வீடியோ 104 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. 3.6 லட்சம் லைக்ஸ் மற்றும் 234 பேர் தாத்தாவின் திறமைக்கு பாராட்டி உள்ளனர். அதில் இத்தனை வயதிலும் மிகவும் பிரமிப்பு கணித தாத்தா எனவும், தெய்வமே,,உங்கள் கால் தொட்டு,,வணக்கம், எனக்கு தலைசுற்றி விழுந்து விட்டேன் என பலரும் ஆச்சர்யத்தில் உறைந்து போய் உள்ளனர்.



ஒருவர் தமிழன் என்று சொன்னாலே கெத்து தான் முன்னோர் சொல்லும் முத்திய நெல்லியும் முதலில் கசக்கும் பின்பு இனிக்கும் என்பது பொருள் பட்டது என கமெண்ட்ஸ்சில் பதிவிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்