சமீபத்தில் பனிச்சிறுத்தைகளின் மற்றொரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
காதலுக்கு மொழிகள் கிடையாது, அதற்கு இனம், மதம், நிறம் என எதுவும் தெரியாது. காதல் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். 5 அறிவு கொண்ட ஜீவராசிகளுக்கும் காதல் வரும் என்பதை எடுத்துரைக்கும் விதத்தில் ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.குறுகிய வினாடிகள் கொண்ட அந்த வீடியோ கிளிப்பில், இரண்டு பனிச்சிறுத்தைகள் உறங்கத் தயாராகும் போது ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பதை காணலாம். அதேபோல ஒன்றையொன்று பாசத்தோடு முகத்தில் நக்கிக் கொள்வதையும் காண முடிகிறது. இந்த வீடியோ பிக் கேட் சரணாலயம் என்ற அமைப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த இரண்டு பனி சிறுத்தைகளும் இந்த சரணாலையத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.மேலும் இரண்டு பனிச்சிறுத்தைகளில் ஆணின் பெயர் யார்கோ, மற்றும் பெண் பனிசிறுத்தையின் பெயர் லைலா ஆகும். மனதைக் கவரும் இந்த வீடியோ பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியூஸ்களை பெற்றுள்ளது. இந்த வீடியோவை காணும் நெட்டிசன்களும் தங்கள் பிரமிப்பையும் பாராட்டையும் கருத்துகள் பிரிவில் பகிர்ந்து வருகின்றனர்.மேலும் அந்த வீடியோ பதிவில் பிக் கேட் சரணாலயம் குறிப்பிட்டிருந்ததாவது, "யார்கோவும் லைலாவும் ஒரு அழகான ஜோடி. நாள் முடிவில் அவர்கள் ஒன்றாக படுக்கைக்குச் செல்வார்கள். யார்கோ தனது காதலிக்கு ஒரு சிறந்த அரவணைப்பாளராக இருக்க எவ்வளவு விரும்புகிறார் என்பதை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்! " என்று கேப்ஷன் செய்திருந்தது.இதேபோல, பாரடைஸ் வனவிலங்கு பூங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட இதே போன்ற வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பியது. அந்த வீடியோ கிளிப்பில், இரண்டு பனிச்சிறுத்தைகள் தங்கள் தற்காலிக படுக்கையில் ஒருவருக்கொருவர் பாசத்தை வெளிப்படுத்திக்கொண்டதை காண முடியும். வேட்டையாடும் விலங்குகளில் காதல், அன்பு, பாசம் ஆகியவை வெளிப்படுவது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.சமீபத்தில் பனிச்சிறுத்தைகளின் மற்றொரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. மேலும் அது சரணாலயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல. லடாக் மலை பிரதேசத்தில் அமைத்துள்ள பனி மலையின் மீது இரண்டு பனிச் சிறுத்தைகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன. அதில், எதிர்பாராத விதமாக இரு பனி சிறுத்தைகளும் மலையின் உச்சியில் இருந்து கீழே விழுந்தன.சில அடி தூரம் அந்தரத்தில் பறந்தபடி விழுந்த ஒரு பனி சிறுத்தை தரையை அடைந்ததும் பனி மலையில் உருண்டபடி கீழே சென்றது. அதன்பிறகு தான் துரத்தி வந்த மற்றொரு பனி சிறுத்தையை பிடித்து கொண்டு சில தூரத்திற்கு கீழே உருண்டு சென்றன. பிறகு சுதாரித்து கொண்ட இரு பனி சிறுத்தைகளும் எழுந்து மீண்டும் விளையாடத் தொடங்கியுள்ளன. அந்த காட்சிகள் உண்மையில் பிரமிப்பை தருகின்றன.
Comments
Post a Comment