ஸ்கூட்டர் மீது படமெடுத்தும் ஆடும் நல்ல பாம்பு; ப்ளாஸ்டிக் கேனில் பிடித்த மனிதர் – வைரலாகும் வீடியோ
- Get link
- X
- Other Apps
நீங்களும் பெரிய பாம்பு பிடி வீரராக இருந்தால் ஒரு முறைக்கு பல முறை யோசனை செய்து பாம்புகளை பிடிக்க முயல்வது நல்லது.
மழைக்காலங்களில் வீடுகளுக்கும், மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் பக்கங்களுக்கும் பாம்புகள் வருவது இயல்பான ஒன்று தான். வனத்துறையினருக்கு முறையாக தகவல் தெரிவித்து அவர்கள் வரும் வரை காத்திருப்பது நல்லது. ஆனால் சமீபத்தில் ஒருவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் இருந்த பாம்பை தண்ணீர் கேனால் பிடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 நிமிடங்களுக்கும் மேலாக ஓடும் இந்த வீடியோவை இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். ஸ்கூட்டியின் முன்பு இருந்த பாம்பு வெளியே வந்த பிறகு அங்கிருந்து செல்லாமல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே இருந்தது. ஆரம்பத்தில் ஹூக் வைத்து அதனை ஒருவர் பிடிக்க முயன்றார். ஆனால் அந்த பாம்பு சிறிதும் கூட நகராமல் இருக்கவே பெரிய ப்ளாஸ்டிக் பாட்டிலை வைத்து அந்த பாம்புவின் தலைப்பகுதி வழியே கவிழ்த்து இந்த பாம்பை பிடித்தார்.
தெலுங்கானாவில் நடைபெற்ற இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பலரும் இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கருத்துகளை பின்னூட்டமாக தெரிவித்தனர். ஒரு பின்னூட்டத்ஹ்டில், யுகேந்தர் சைரிகபு என்பவர், “எனக்கு அந்த பாம்பை பிடித்தவரை மைகவும் நன்றாக தெரியும். அவர் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் ஸ்நேக் சொசைட்டியின் மூத்த உறுப்பினராக பணியாற்றுகிறார். தன்னுடைய வாழ்நாளில் ஆயிர கணக்கான பாம்புகளை அவர் பிடித்திருக்கிறார். மிகவும் பயிற்சி பெற்ற நபர் தான் என்று குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான பல பின்னூட்டங்களையும் அந்த வீடியோவின் கீழ் பலர் பதிவு செய்துள்ளனர். நீங்களும் பெரிய பாம்பு பிடி வீரராக இருந்தால் ஒரு முறைக்கு பல முறை யோசனை செய்து பாம்புகளை பிடிக்க முயல்வது நன்மை அளிக்கும்.
ALSO READ : என்னது வாத்து பேசுதா... ஆஸ்திரேலியாவில் வினோதம்...!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment