நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உறைபனியில் சிக்கிய நாயை மீட்டவருக்கு குவியும் பாராட்டு - வைரல் வீடியோ!

 கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது குளத்தில் இறங்கி நாயை காப்பாற்றியதற்காக இணையத்தில் பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது எண்ணற்ற வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், நாய்கள், பூனை, பறவைகள், யானை போன்றவற்றின் குறும்பு தனமான செயல்கள் அடங்கிய வீடியோக்கள் அதிகமாக இருப்பதை நம்மால் காண முடிகிறது. மேலும் மனிதத்துவதை அடிப்படையான சில உணர்வுபூர்வமாக வீடியோக்களையும் நாம் அவ்வப்போது காணலாம். அந்த வகையில் உறைபனி இருந்து நாயை ஒருவர் காப்பாற்றிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் ரஷ்யாவில் நடந்துள்ளது. ரஷ்யாவில் சில மாதங்களில் அதிகமாக பனிப்பொழிவு இருக்கும். அந்த நேரத்தில் உறைபனி சூழ்ந்து இருப்பதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி எண்ணற்ற பிரச்சனைகளும், உயிரிழப்புகளும் கூட ஏற்படும். இந்த நிலையில் ரஷ்யாவில் உள்ள மகடன் நகரில் ஒரு உணர்வுபூர்வமான சம்பவம் நடந்துள்ளது. மகடன் நகர் முழுவதும் உறைபனியால் சூழப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்த ஒரு நீர்நிலையில் நாய் ஒன்று சிக்கியுள்ளது. உயிருக்கு போராடிய நிலையில் அந்த நாய் கத்தியுள்ளது.

ஒரு கப்பலின் தளத்தில் இருந்த ஒருவர் நாயின் குரைப்பு சத்தம் கேட்டு உடனடியாக அப்பகுதிக்கு விரைந்தார், ஓசை வரும் திசையை பார்த்து அவர் வேகமாக சென்ற நிலையில் அங்கு உறைபனிக்குள் நாய் ஒன்று சிக்கியிருத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அந்த நாயை மீட்டு கரைக்கு கொண்டுவந்து அதற்கு சிகிச்சை அளித்து அதன் உயிரை காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

நீர்நிலையை நோக்கி ஒருவர் பதற்றமாக விரைந்து செல்லும் வகையில் இந்த வீடியோ தொடங்குகிறது. அவர் செல்லும் பாதை முழுவதும் பனியால் சூழ்ந்துள்ளது. எனினும் அவர் விரைந்து அந்த நாயை மீட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த பிறகு அனைவரும் மகிழ்ச்சியாக உணர்வார்கள் என்ற தலைப்பில் இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் நாயை காப்பாற்றியவரின் செயலை பாராட்டி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது குளத்தில் இறங்கி நாயை காப்பாற்றியதற்காக பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. முன்னதாக இதேபோல கடும் உறைபனியில் சிக்கிய நாய் ஒன்றை டான் ஹோம்ஸ் என்பவர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதேபோல வடக்கு ஐரோப்பாவில் உள்ள எஸ்தோனியாவில் உறைபனியில் சிக்கிய ஓநாயை, நாய் என நினைத்து அங்கு இருந்த தொழிலாளர்கள் மீட்ட சம்பவம் பரவலாக ஷேர் செய்யப்பட்டது. அந்த ஓநாயை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு சென்ற பின்னர் தான் அந்த தொழிலாளர்களுக்கு அது ஓநாய் என்பது தெரியவந்தது. அதுவரை அவர்கள் அனைவரும் தாங்கள் மீட்டது நாய் என நினைத்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!