நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சிரிக்கும் பாம்பு; குதிக்கும் மீன்… ஆச்சரியம் ஏற்படுத்தும் விலங்குகளின் தருணங்கள் – வைரல் புகைப்படங்கள்

இந்த புகைப்படங்களை பார்க்கும் போதே மனம் மகிழ்ச்சி அடைகிறது.
மிகவும் நகைச்சுவையான வனவிலங்கு புகைப்படங்களுக்கான விருதுகளை அறிவித்தது Comedy Wildlife Photo Awards குழுமம். உலகெங்கிலும் இருந்து 7000க்கும் மேற்பட்ட புகைப்படங்களை பெற்ற இந்த குழுமம் இறுதியாக 42 புகைப்படங்களை தேர்வு செய்து மக்களின் விருப்பமான புகைப்படங்கள் எது என்பதை தேர்வு செய்ய பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளது.

இந்த 42 புகைப்படங்களில், இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட சிரிக்கும் பாம்பின் புகைப்படம், ஆஸ்திரேலியாவில் ஆடும் கங்காருகள், மற்றும் ஃபால்க்லாந்து தீவுகளில் ஸ்டிஃப்பாக நடந்து வரும் பென்குயின்களின் புகைப்படங்களும் அடங்கும்.

வனவிலங்கு புகைப்படங்களின் இலகுவான மகிழ்ச்சியான பக்கங்களை பதிவு செய்யும் பொருட்டு தொழில்முறை புகைப்படக்கலைஞர்களான பால் ஜோய்ன்சன் ஹிக்ஸ் மற்றும் டாம் சுல்லம் ஆகியோர் இந்த முயற்சியை 2015ம் ஆண்டில் துவங்கினார்கள். இந்த முறை வரும் மொத்த வருமானத்தை ஒரங்குட்டான் குரங்களை பாதுகாக்க செலவிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகைப்படங்களை பார்க்கும் போதே மனம் மகிழ்ச்சி அடைகிறது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்