நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மானின் முதுகில் ஒய்யாரமாய் சவாரி செய்யும் குரங்கு, பார்த்து மகிழும் நெட்டிசன்கள்

 வீடியோவில் ஒரு குரங்கு மற்றும் ஒரு மானின் நட்பு காணக்கிடைக்கிறது. இதில், மானின் முதுகில் குரங்கு சவாரி செய்யும் அற்புதமான காட்சியை நாம் காண முடிகிறது. 

இணையத்தில் விலங்குகளின் பல வேடிக்கையான மற்றும் அழகான வீடியோக்கள் நிரம்பியுள்ளன. தற்போது அப்படி ஒரு வீடியோ நெட்டிசன்களின் இதயங்களை கவர்ந்து வருகிறது.

இந்த வீடியோவில் ஒரு குரங்கு மற்றும் ஒரு மானின் நட்பு காணக்கிடைக்கிறது. இதில், மானின் முதுகில் குரங்கு சவாரி செய்யும் அற்புதமான காட்சியை நாம் காண முடிகிறது. சவாரி செய்வதோடு மட்டுமல்லாமல், அந்த குரங்கு தன்னுடைய நண்பனை விட்டு பிரிய மனமில்லாமல் இருப்பதையும் வீடியோவில் நாம் காண முடிகின்றது.

வைரல் ஹாக் என்ற இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், “இந்த குரங்கு விடுவதாக இல்லை” என்ற தலைப்புடன் பகிரப்பட்ட வீடியோ விரைவிலேயே வைரல் ஆனது.

இந்த வைரல் வீடியோ  கிளிப்பில், குரங்கு ஒரு மானின் மீது அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. ஒரு பெரிய தோட்டப் பகுதிக்குள் உள்ள ஒரு பாதையில் மான் நடக்கத் தொடங்குகிறது. வீடியோவை தொடர்ந்து பார்த்தால், குரங்கு அதன் முதுகில் உட்கார்ந்திருப்பதால், மான் நடக்க முடியாமல் நடப்பதை நாம் காணலாம்.


வீடியோவின் முடிவில், மான்  ஓடத் தொடங்குகிறது. குரங்கோ எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடும் நிலையில், முதுகின் விளிம்பில் இருக்கிறது. ஆனால், சரியான நேரத்தில் குரங்கு சமநிலையைப் பெற்று விடுகிறது.

சமூக வலைதளங்களில் இது போன்ற அற்புதமான, வேடிக்கையான விலங்கு வீடியோ வைரல் ஆவது இது முதல் முறை அல்ல. சமீபத்தில், ஒரு அழகான நாய் தனது குதிரை நண்பனை வாக்கிங் அழைத்துச் செல்லும் மற்றொரு வீடியோ மிகவும் வைரல் ஆனது.

அந்த வீடியோ கிளிப்பில், ஒரு சிறிய கருப்பு நாய், கழுத்தில் கயிறுடன் இருந்த ஒரு பெரிய குதிரையை கயிற்றை பிடித்துக்கொண்டு அழைத்துச் செல்வதைக் காண முடிந்தது. இரு விலங்குகளும் வயல்வெளி மற்றும் தொழுவத்தில் செய்த வாக்கிங்கை மிகவும் ரசித்ததாகத் தெரிகிறது.


ALSO READ : மாமத யானைகளை மீண்டும் உருவாக்கி பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முயற்சி: இதில் சிக்கல் என்ன?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்