நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எந்த ஒரு பாதுகாப்பு கவசமும் இல்லாமல் ஆயிரம் தேனீக்களின் நடுவே கம்பீரமாக நடந்த மனிதர்.. வைரல் சம்பவம்!

 சமூக ஊடகங்கள் மற்றும் அவரது சமூகத்தில் என்டிசாபாக்கு கிடைத்த புகழ் தவிர, தனது அசாதாரண திறமை ஒரு ஒழுக்கமான வாழ்க்கையை சம்பாதிக்க உதவியது" என்று என்டிசாபா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.


"தேனீக்களின் ராஜா" என்று தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொண்ட நபர் ஒருவர் எந்த ஒரு பாதுகாப்பு கவசமோ, உடையோ அணியாமல், தன் மீது ஆயிரக்கணக்கான தேனீக்கள் அமர்ந்திருக்க நம்பமுடியாத வகையில் கம்பீரமாக நடந்து சென்ற சம்பவம் வைரலாகியுள்ளது. அவர் மீது அமர்ந்திருந்த தேனீக்கள் எதுவும் அவரை கொட்டவில்லை. தேனீக்களுடன் நடக்கும் தனது அசாத்திய திறமையால் அந்த நபர் மக்களை திகைக்க வைத்துள்ளார்.

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் ருவாண்டாவில் வசிப்பவரின் பெயர் தான் என்டிசாபா (Ndayisaba). இவர் ஒரு தேனீ வளர்ப்பவராக பணிபுரிகிறார். என்டிசாபா தனது சிறு வயதிலிருந்தே தேனீக்களை கவனித்து வருகிறார். இந்த நிலையில் இவர் சமீப காலமாக நெட்டிசன்களிடையே மிகவும் பிரபலமடைந்தார். ஆடை அணிவது போல அவரது உடல் முழுவதும் தேனீக்கள் அமர்ந்திருப்பது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டது.

மேலும் அவர் எவ்வாறு தேனீக்களை கட்டுப்படுத்துகிறார் என்பதையும் டெய்லி ஸ்டார் என்ற பத்திரிகை நிறுவனம் விளக்கியுள்ளது. அதில் முதலில் என்டிசாபா தேன்கூட்டில் உள்ள ராணி தேனீயை தேடுகிறார். பின்னர் அவர் மற்ற தேனீக்களை ஈர்க்க ராணி தேனீயை தனது உடலில் வைத்தார். மேலும் ராணித் தேனீயை தன் உடலில் ஒரு இடத்தில் வைக்க, பிற தேனீக்களும் அவரை நோக்கி பறக்கின்றன. இயற்கையாகவே, மற்ற தேனீக்கள் தங்கள் ராணித் தேனீக்களைப் பாதுகாப்பதற்காக ராணித் தேனீவைச் சுற்றி ஒரு கவசத்தை உருவாக்கி, அவளைப் பாதுகாப்பாக வைத்திருக்கின்றன.

எனது சமூகத்தில் தேனீ வளர்ப்பில் நான் நன்கு அறியப்பட்டவன் என்றும் தேனீக்கள் அவரை ஒருபோதும் கொட்டுவதில்லை எனவும் என்டிசாபா அந்த பத்திரிகையிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அப்பகுதியின் உள்ளூர் ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த என்டிசாபா, “இதை கண்டு மக்கள் பயப்படவும் இல்லை, கவலைப்படவும் இல்லை. அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும் இந்த கலையை நான் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அதற்கு அவர்கள் தேனீக்களைத் தங்களைத் தாங்களே வைத்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.

சமூக ஊடகங்கள் மற்றும் அவரது சமூகத்தில் என்டிசாபாக்கு கிடைத்த புகழ் தவிர, தனது அசாதாரண திறமை ஒரு ஒழுக்கமான வாழ்க்கையை சம்பாதிக்க உதவியது" என்று என்டிசாபா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

மேலும் தேனீக்களை ஈர்க்கும் தந்திரத்தை பற்றி கேட்டி லீ என்ற அனுபவம் வாய்ந்த தேனீ வளர்ப்பவர் பேசுகையில், தேனீ கூட்டங்களுக்கு நன்கு உணவளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அவர்கள் மீது சர்க்கரை பாகை அவ்வப்போது தெளிக்க வேண்டும் தேனீ தகவலில் அவர் குறிப்பிட்டிருந்தார். நன்கு உணவளிக்கப்பட்ட தேனீக்கள் பிறரை கொட்டும் அபாயம் மிகக்குறைவு என்று கேட்டி குறிப்பிட்டுள்ளார். தேனீ வளர்ப்பு பணி மிகவும் ஆபத்தான பணி. என்டிசாபா தனது 30 வருட தேனீ வளர்ப்பில், ஒருமுறை கூட தேனீக்களால் தாக்கப்படவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் தேனியை பராமரிக்கும் போதும், ஒருமுறையாவது தேனீ என்னை கொட்டிவிடும் என்று கேட்டி குறிப்பிட்டுள்ளார்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்