குறைந்த வளத்தை வைத்து புதிய கண்டுபிடிப்புகளை இந்தியர்கள் உருவாக்கி வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் வெறும் குச்சிகள் மற்றும் எக்ஸாஸ்ட் ஃபேன் ஆகியவற்றை கொண்டு ஒரு கூலரை உருவாக்கியுள்ளனர்.
கிடைக்கும் பொருளை வைத்து புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பது இந்தியர்களுக்கு ஒன்றும் பெரிய விஷயமல்ல. விளையாட்டுகளுக்கு எப்படி ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறதோ, அதேபோல வள மேலாண்மைக்கு ஒரு ஒலிம்பிக் பொட்டியை நடத்தினால் கட்டாயம் அதில் இந்தியர்கள் தான் தங்கப்பதக்கம் வெல்வர். அந்த அளவுக்கு குறைந்த வளத்தை வைத்து புதிய கண்டுபிடிப்புகளை இந்தியர்கள் உருவாக்கி வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் வெறும் குச்சிகள் மற்றும் எக்ஸாஸ்ட் ஃபேன் ஆகியவற்றை கொண்டு ஒரு கூலரை உருவாக்கியுள்ளனர். மேலும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. பொதுவாக, தொழில்நுட்பங்கள் உலகளவில் கொட்டி கிடக்கின்றன.
ஆனால் அவை அனைத்தும் சாமானிய மக்களால் வாங்க முடியுமா என்றால் அது கேள்விக்குறிதான். சமீப ஆண்டுகளாக நிலவி வரும் அதிக வெப்பநிலையால் பலர் தங்களது வீடுகளில் ஏசி, கூலர் போன்ற சாதனைகளை பயன்படுத்தி வருகின்றனர். அதில் பலர் EMI ஆப்ஷனில் ஏசி வாங்கி மாட்டிக்கொள்கின்றனர். ஆனால் சிலர் இதுபோன்ற இன்னோவேடிவ் விஷயங்களால் பிறரை ஆச்சர்யப்படுத்தி வருகின்றனர். ஏனெனில் அந்த வீடியோவில் இடம்பெற்ற கூலருக்கு அவ்வளவு செலவாகவில்லை. கொஞ்சம் மூளையை யோசிக்க வைத்தாலே போதும்.
@bhandraic என்ற ட்விட்டர் யூசரால் பகிரப்பட்ட அந்த 14-வினாடி கிளிப் வீடியோவில், புதுமையான குளிரூட்டி முழு வீச்சில் செயல்படுவதைக் காட்டியது. எக்ஸாஸ்ட் மின்விசிறி, வெறும் கயிறு மற்றும் மரக்குச்சி கொண்டு பொருத்தப்பட்டுள்ளது. மரக்குச்சிகள் ஸ்டாண்ட் போல நிற்கும் அளவுக்கு அவை கயிறு மூலம் கட்டப்பட்டது. பின்னர் குச்சிகளின் மேற்பரப்பில் எக்ஸாஸ்ட் ஃபேன் பொருத்தப்பட்டு சரியாக நிற்கும் வகையில் அவை கயிறு மூலம் கட்டப்பட்டிருந்தது.
இந்த கண்டுபிடிப்பின் பின்னணியில் உள்ள யோசனையை @bhandraic என்ற ட்விட்டர் யூசர் பாராட்டியதோடு, இதை உருவாக்கியவர்களுக்கு எனது வணக்கம் என்று வீடியோ பதிவில் கேப்ஷன் செய்திருந்தார்.இதுபோன்று இணையத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்த பல இன்னோவேடிவ் வீடியோக்கள் உள்ளன. முன்னதாக, ஒரு தெலுங்கானா நபர் ஒருவர் தனது கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லாமல் இருக்க ஒரு புதுமையான யோசனையை கொண்டுவந்திருந்தார். அவரின் புதுமையான யோசனை இணைய வாசிகளை வியக்க வைத்தது. தெலுங்கானாவின் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சமீபத்தில் தெலுங்கானாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.சிர்சில்லா நகரின் சாலைகள் நீரில் மூழ்கி மழை நீர் குடியிருப்புப் பகுதிகளிலும் புகுந்தது. மாநில பேரிடர் மீட்பு படையினர் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த நிலையில் அப்பகுதியில் வசித்த ஒரு நபர் தனது கார் வெள்ளத்தில் அடித்து செல்லாமல் பாதுகாக்க காரில் கயிறுகளை கட்டி அதன் முனையை தனது வீட்டின் மேல் உள்ள கான்கிரீட் தூண்களிலும் எதிரில் உள்ள வீட்டு தூண்களிலும் காட்டியுள்ளார். இதன் காரணமாக, தெருவில் மழை வெள்ளம் அடித்து சென்ற போதிலும் அந்த கார் நகராமல் அந்த பகுதியில் அப்படியே பாதுகாப்பாக நின்றது. இந்த யோசனை விரைவில் இணையத்தில் வைரலானது. இருப்பினும், தெரு முழுவதும் மழை நீர் தேங்கியிருந்ததால் வாகனம் முக்கால் வாசி மூழ்கியிருந்தது.
Comments
Post a Comment