நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அட “தம்மாத்துண்டு” மேட்ட கடக்க எவ்வளவு போராட்டம்! – குட்டி யானையின் வைரல் வீடியோ

இளம் வயது பெண் யானைகள், கூட்டத்தின் முன் பகுதியிலும், மத்திய வயது யானைகள், குட்டியிட்ட யானைகள் போன்றவை நடுவிலும், மிகவும் வயதான பெண் யானைகள் கூட்டத்தின் இறுதியிலும் பயணிக்கும் பண்புகள் கொண்டவை.
யானைகளில் பெண் யானைகள் பொதுவாகவே கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை. தங்களின் குழுவில் இருந்து ஆண் யானைகளை அதன் 13 வயதில் வெளியேற்றிவிடும். பெரும்பாலான சூழலில் ஆண் யானைகள் தனித்தோ அல்லது ஆண் யானைகளுடன் கூட்டகவோ சுற்றும் பழக்கம் கொண்டிருக்கும். இணை சேரும் காலத்தின் போது மட்டுமே பெண் யானைகளுடன் அவைகள் இருப்பதை காண முடியும்.

உணவு, தண்ணீர் மற்றும் இதர தேவைகளுக்காக தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கும் யானைகளின் வாழ்நாள் பயணம் மிகவும் அழகானது. தனித்துவமானது. தங்களின் குழுவில் யாராவது ஒருவருக்கு முடியவில்லை என்றாலும் கூட காத்திருந்து, அது உடல் நலம் தேறும் வரை எங்கேயும் நகராமல் இருக்கும் பண்பு கொண்டவை.



கூட்டத்தில் ஒரு மூத்த பெண் யானை தான் தலைமை வகிக்கும். இளம் வயது பெண் யானைகள், கூட்டத்தின் முன் பகுதியிலும், மத்திய வயது யானைகள், குட்டியிட்ட யானைகள் போன்றவை நடுவிலும், மிகவும் வயதான பெண் யானைகள் கூட்டத்தின் இறுதியிலும் பயணிக்கும் பண்புகள் கொண்டவை. இளம் யானைகளுக்கு எந்த வகையான பாதிப்புகளும் ஏற்படாத வகையில் இருக்கவே இப்படியான பழக்கத்தை யானைகள் கொண்டிருக்கின்றன.

இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்றில், ஆற்றைக் கடந்து முன்னேறி வரும் யானைக்கூட்டம் ஒன்று அந்த கூட்டத்தில் குட்டியானைக்கு அழகாக உதவி செய்து மேட்டை கடக்க உதவி செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளது. மனிதர்களைப் போன்றே, முட்டி போட்டு மேலே ஏறி பிறகு தங்களின் பாதங்கள் மூலம் இந்த யானைகள் தொடர்ந்து நடந்து செல்கின்றன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ள இந்த வீடியோ, யானை கூட்டங்களின் பண்புகள் என்ன என்பதை அழகாக விவரிக்கிறது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்