நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Buffalo milk health benefits: எருமைப்பாலின் நன்மைகள் மற்றும் பயன்கள் என்னென்ன?

 எருமை மாட்டு பாலின் நன்மைகள் மாற்றும் பயன்கள் என்னென்னவென்று இங்கே காண்போம்.


எருமை பாலில் பசுவின் பாலை விட கால்சியம் மற்றும் புரதம் அதிகம் உள்ளது. ஆரோக்கியமான எலும்புகள், பல் ஆரோக்கியம் மற்றும் இருதய ஆரோக்கியத்திற்கு எருமை பால் சிறந்தது. புரோட்டீன் மற்றும் கொழுப்புச்சத்து மிகுந்த எருமை மாட்டுப்பால் நம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைப் பயக்கின்றது. எனவே எருமை மாட்டுப்பாலில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்று இங்கே பார்போம். 


* எருமைப்பாலில் (Buffalo Milk) புரதச்சத்து நிறைந்துள்ளது: உடல் தசைகள் வலுவடையவும், ஆணழகனாகவும் மாற விரும்பும் இளைஞர்கள், அதிகப் புரதச்சத்து நிறைந்த எருமைப்பாலை தினமும் பருகுவது நல்ல பலனைத் தரும். அதேபோல உடலில் உள்ள என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களின் செயல்பாட்டிற்கும் எருமைப்பால் சிறந்தது.

* எருமைப்பால் இதய ஆரோக்கியமானது: எருமைப்பால் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிக மிக உகந்தது. ஒரு டம்ளர் எருமைப்பாலில் 412.4 கிராம் கால்சியம் உள்ளது. இந்த கால்சியம், ரத்த அழுத்தத்தை சமன்செய்து, இதயத்திற்கு ரத்தம் சீராகப் பாய்வதை உறுதி செய்கிறது.


* எருமைப்பாலில் எலும்புகள் வலிமை ஆகும்: எருமைப்பாலில் மெக்னீஷியம், துத்தநாகம் , பாஸ்பரஸ் உள்ளிட்டவையும் இடம்பெற்றிருப்பதால், எலும்பை வலுவடையச் செய்கிறது. மேலும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும் அரணாகச் செயல்படுகிறது.


* எருமைப்பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்: எருமைப்பாலில் நிறைந்துள்ள வைட்டமின் A, வைட்டமின் C ஆகியவை நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டி உடலை நோய்கள் அண்ட விடாமல் தடுக்கின்றன.மேலும் இவ்விரு வைட்டமின்களும், மிகச் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடென்டுகளாக செயல்பட்டு, உடலை சுத்தப்படுத்துகிறது.


* எருமைப்பால் எடை அதிகரிக்க உதவும்: எடை அதிகரிக்க விரும்புபவர்கள் எருமை பாலை உட்கொள்ளலாம். ஏனெனில் இதில் உள்ள கலோரிகளின் அளவு மிக அதிகமாக உள்ளது மேலும் இது உங்கள் உடலின் ஆற்றலையும் வேகமாக அதிகரிக்கிறது.


ALSO READ : 10 நிமிடத்தில் பளிச்சென முகம் வேண்டுமா ? அப்ப இதை பண்ணுங்க..

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்