குடித்தால் கிளுகிளுப்பு; தடவினால் பளபளப்பு - வியக்க வைக்கும் 'Wine'
- Get link
- X
- Other Apps
நம் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க நாம் சில நேரங்களில் மருதாணி, சில நேரங்களில் வெங்காய சாறு மற்றும் சில நேரங்களில் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்துகிறோம்.
நம் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க நாம் சில நேரங்களில் மருதாணி, சில நேரங்களில் வெங்காய சாறு மற்றும் சில நேரங்களில் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்துகிறோம். ஆனால் அதோடு, பல விதமான முடி பிரச்சனைகளை நீக்க ரெட் ஒயின் பயன்படுத்தலாம். ஆம், சிவப்பு ஒயினில் ரெஸ்வெராட்ரோல் உள்ளது, இது முடி உதிர்தல், மெல்லிய மற்றும் பலவீனமான முடி போன்ற முடி பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும். முடிக்கு சிவப்பு ஒயினை எப்படி பயன்படுத்துவது எப்படி என்பதை பார்க்கலாம்.
முடிக்கு சிவப்பு ஒயின் பயன்படுத்தும் முறை
தலையில் அரிப்பு
உங்கள் தலையில் அரிப்பு இருந்தால், அரை கப் சிவப்பு ஒயின் எடுத்து அதில் 2 தேக்கரண்டி, பூண்டு விழுது கலந்து இரவு முழுவதும் ஊற விடவும். மறுநாள் காலையில் இந்த பேஸ்டை தலை மற்றும் கூந்தலில் தடவவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை இதைச் செய்வதன் மூலம், தலையில் அரிப்பு இருந்து நிவாரணம் கிடைக்கும்.
பொடுகு நீக்க உதவும்
பொடுகை அகற்ற சிவப்பு ஒயின் மிகவும் சிறந்தது. உங்கள் தலையில் பொடுகு தொல்லை நீண்ட காலமாக நீங்காமல் இருந்தால், 1 கப் சிவப்பு ஒயினில் 1 கப் தண்ணீரை கலந்து முடி மற்றும் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். மசாஜ் செய்த பிறகு, அரை மணி நேரம் கழித்து ஷாம்பூவினால், தலைமுடியை சுத்தம் செய்யவும்.
முடி உதிர்தல் பிரச்சனை
உங்களுக்கு தலைமுடி அதிகம் உதிர்ந்தால், அதற்கு சிகிச்சையளிப்பது அவசியம். ஏனெனில், ஆண்களுக்கு அதிக முடி உதிர்தல் காரணமாக, வழுக்கை ஏற்படலாம். முடி உதிர்தலைத் தடுக்க, 1 கப் சிவப்பு ஒயினை நேரடியாக முடி மற்றும் உச்சந்தலையில் தடவவும். லேசாக கைகளால் மசாஜ் செய்த பிறகு 10-15 நிமிடங்கள் விட்டு விடுங்கள். அதன் பிறகு மென்மையான ஷாம்பூ கொண்டு சுத்தம் செய்யவும்.
முடி வளர்ச்சிக்கு சிவப்பு ஒயின்
முடி வளர்ச்சிக்கு, 2 முட்டைகளை அடித்து, அதில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயை கலந்து நன்றாக கலக்கவும். இதற்குப் பிறகு, சிவப்பு ஒயின் சேர்த்து ஒரு கலவையை உருவாக்கவும். இப்போது இந்த கலவையை முடியில் தடவி, அரை மணி நேரம் ஊற விடவும். அதன் பிறகு மென்மையான ஷாம்பூ கொண்டு சுத்தம் செய்யவும். வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்யுங்கள்.
ALSO READ : உடல் இயக்கமில்லாத பெண்களும்.. அதனால் ஏற்படும் பிரச்சனைகளும்...
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment