தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளப் போகும் குஜராத் பெண்... இந்தியாவில் இதுதான் முதல் முறை..!
- Get link
- X
- Other Apps
திருமணம் முடிந்த கையோடு 2 வாரங்கள் கோவா ஹனிமூன் செல்கிறார்.
ஆம்... நீங்கள் படித்த தலைப்பு சரிதான்.. குஜராத் வதோதராவைச் சேர்ந்த 24 வயதான ஷாமா பிந்து வரும் ஜூன் 11 ஆம் தேதி தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். இவர் எம்.எஸ் பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி பட்டம் பெற்றவர்.
மற்றவர்கள் நம்மை நேசிப்பதை விட நம்மை நாமே முதலில் நேசிக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் இந்த பெண் தன்னை அளவுக்கடந்து நேசித்தது மட்டுமல்லாமல் தன்னைத் தானே திருமணமும் செய்துகொள்ளப் போவதாக அறிவித்திருப்பது சற்று புதிதாகவே உள்ளது.
வெளிநாடுகளில் தான் வளர்த்த மரத்தை திருமணம் செய்து கொண்டவர், தான் வளர்த்த நாயை திருமணம் செய்துகொண்டவர், ஏன் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டவர் என்ற செய்திகளையும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அவை எங்கோ வெளிநாடுகளில் நடக்கின்றன. இந்தியாவில் இதெல்லாம் நடக்குமா என்று நினைத்திருக்கலாம். ஆனால் அது இந்தியாவிலும் அரங்கேற இருப்பது வியப்பை தருகிறது.
இவர் திருமணம் செய்துகொள்ளப் போவது மட்டுமன்றி ஹனிமூனிற்கு கோவா செல்லவிருப்பதாகவும் திட்டமிட்டுள்ளார். இந்த திருமண நிகழ்வு ஏதோ நான்கு பேர் முன்னிலையில் மட்டும் நடக்கப் போவது கிடையாது. ஜூன் 9 ஆம் தேதி மெஹந்தி நிகழ்ச்சியும், ஜூன் 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சொந்த பந்தங்கள் கூட , ஐயர் மந்திரங்கள் ஓத அனைவரின் ஆசிர்வாதத்தோடு கோவிலில் நடக்கவிருக்கிறது. ஆனால் வித்தியாசம் என்னவெனில் மணமகளும் அவரே மணமகனும் அவரே....
இதுகுறித்து அவரே டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு பேட்டியும் அளித்துள்ளார். அதில் “ இதுவரை இந்தியாவில் இதுபோன்ற திருமணம் நடந்துள்ளதா என்று பார்த்தால் எங்குமே நடக்கவில்லை. எனவே நான்தான் முதல் பெண் என்று நினைக்கிறேன். எனக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை. அதேசமயம் என்னை மணப்பெண்ணாக அலங்கரித்து சபை கூட நிற்க வேண்டும் என்று ஆசை. எனவேதான் இந்த முடிவை எடுத்தேன் என்று கூறியுள்ளார்.
மேலும் ஷாமா “ இதில் என்ன சிறப்பு அம்சம் எனில் இதை ஒரு பெண் செய்கிறாள் என்பதுதான். தன்னைத்தானே திருமணம் செய்துகொள்வது என்பது பலருக்கும் பொருந்தாத விஷயமாக இருக்கலாம். ஆனால் இதில் நான் சொல்ல வருவது இதை ஒரு பெண் முன்னெடுக்கிறாள் என்பதுதான்” எனக் கூறியுள்ளார்.
அவரின் குடும்பத்தார் இதற்கு என்ன சொன்னார்கள் என்ற கேள்விக்கு “ அவர்களின் முழு ஆசிர்வாதத்துடன் தான் செய்கிறேன். உனக்கு பிடித்ததை செய் என கூறிவிட்டனர்” என்று கூறியுள்ளார்.
திருமணம் கோத்ரியில் உள்ள ஒரு கோவிலில் நடக்கவுள்ளது. திருமணம் முடிந்த கையோடு 2 வாரங்கள் கோவா ஹனிமூன் செல்லவுள்ளார்.
ALSO READ : 492 அடி உயரத்தில் தொங்கும் பிரம்மாண்ட கண்ணாடி பாலத்திற்கு கின்னஸ் அங்கீகாரம்.....
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment