காலை எழுந்ததும் வெதுவெதுப்பான நீர்... அதனால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா?
- Get link
- X
- Other Apps
வயிறு உப்புசம் மற்றும் கேஸ்ட்ரிக் தொடர்புடைய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருகிறது.
காலையில் தூங்கி எழுந்ததும் பெரும்பாலான மக்கள் சூடாக ஒரு கப் டீ அல்லது காஃபி அருந்துவதை விரும்புகின்றனர். வேறுசிலர் வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கின்றனர். ஆனால், அதிகாலையில் நம் சோம்பலை முறித்து, நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள ஒரு கப் வெந்நீர் போதுமானது என ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே சமயம், காலையில் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துபவர்களுக்கு, அதீத அசிடிட்டி, அல்சர், உடல் உஷ்ணம் போன்ற பிரச்சனைகள் இருக்க கூடாது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். காலை வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் உடலுக்கு பல்வேறு விதமான நலன்கள் கிடைக்கும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் விழிப்புணர்வு :
ஆயுர்வேத மருத்துவர் தீக்ஷா பாவ்ஸர், வெந்நீர் அருந்துவதன் பலன் குறித்து இன்ஸ்டாகிராம் பதிவு மூலமாக பல கருத்துக்களை கூறியுள்ளார். அவரது பதிவில் கூறியிருப்பதாவது:
காலையில் தினமும் முதல் வேலையாக வெந்நீர் அருந்துவதால் உங்களுக்கு ஒருபோதும் கவலை ஏற்படாது. ஆனால், அசிடிட்டி, அல்சர், உடல் உஷ்ணம் போன்ற பிரச்சனை இருந்தால் கவனமுடன் இருக்க வேண்டும். காலை நேரத்தில், குறிப்பாக பயணம் செய்யும் காலத்தில் வெந்நீர் அருந்தினால், உடலில் நல்ல மாற்றங்கள் தென்படுவதை நீங்கள் உணர முடியும்.
* நம் மலக்குடலை சுத்தம் செய்யும் பணியை எளிமையாக்குகிறது.
* உங்கள் பசி உணர்வு அதிகரிக்கும்.
* வயிறு உப்புசம் மற்றும் கேஸ்ட்ரிக் தொடர்புடைய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருகிறது.
* நமது சருமம் தெளிவாக இருக்க உதவுகிறது.
* இது மட்டும் அல்லாமல், பயணத்தின் போது நாம் சாப்பிடும் அதிகப்படியான உணவுகளால் நமது உடல் எடை அதிகரித்து விடாமல் தடுக்கிறது.
எந்த அளவு சூடாக தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும் :
உங்கள் உடல் வாகு அல்லது தோஷ வாகுவை பொறுத்து குடிநீர் எந்த அளவுக்கு சூடாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆயுர்வேதம் பரிந்துரை செய்கிறது.
* உடலில் கபம் மிகுதியாக இருந்தால் நீங்கள் மிகுந்த சூடான தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம். இது கபத்தால் ஏற்படும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றும்.
* உடலில் பித்தம் அதிகமாக இருந்தால், வெந்நீரை ஆற வைத்து உங்கள் உடல் வெப்ப அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* வாதம் மிகுதியாக இருப்பவர்கள் சூடாகவும் இல்லாமல், குளுமையாகவும் இல்லாமல் வெதுவெதுப்பான அளவில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் அல்லது சீராக வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் காலையில் வெந்நீர் குடிப்பது உதவியாக இருக்கும். உடலில் வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கக் கூடியதாக இது இருக்கும்.
ALSO READ : Bowl Method Diet பற்றி தெரியுமா..? உடல் எடையை வேகமாக குறைக்க இப்போ இதுதான் டிரெண்ட்..!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment