பொதுவாக தலைமுடியில் இருக்கும் அதிகப்படியான வியர்வை, எண்ணெய் பிசுக்குகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுக்கள் என எல்லாம் ஒன்றாக சேர்ந்து தலையில் நமைச்சலை ஏற்படுத்துகின்றன.
வெறும் அரிப்பு தானே என்று அப்படியே விட்டால் காலப்போக்கில் இதுவே பேன் தொல்லை, பொடுகு தொல்லை மற்றும் பூஞ்சை தொற்று என தலையெடுக்க ஆரம்பித்து விடும்.
இதனைஆரம்பத்திலே கட்டுப்படுத்தலாம். தற்போது அவற்றை எப்படி எளியமுறையில் போக்கலாம் என்று பார்ப்போம்.
- ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை நான்கு டேபிள் ஸ்பூன் தண்ணீருடன் கலந்து கொள்ளுங்கள். இதை உச்சந்தலையில் தடவி கூந்தல் முழுக்க தடவி விடவும். பிறகு 1 மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.
- 1 டேபிள் ஸ்பூன் புதினா எண்ணெயில் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும். இந்த எண்ணெய்யை நேரடியாக உச்சந்தலையில் தடவி 1 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர தலை அரிப்பு குறைந்து விடும்.
- கற்றாழை இலையில் உள்ள ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து கைகளால் உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இதைச் செய்து வரலாம்.
- தேவையான வெங்காயத்தை எடுத்து அதில் உள்ள சாற்றை பிழிந்து கொள்ளுங்கள். ஒரு காட்டன் பஞ்சில் நனைத்து உச்சந்தலையில் தடவ வேண்டும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்யலாம்.
- வேப்பிலை இலைகளை வேக வைத்து அரைத்து பேஸ்ட்டாக்கி தலையில் தடவி 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். பிறகு சாதாரண நீரில் கழுவி விட வேண்டும்.
- தூய்மையான ஆர்கன் எண்ணெய்யை எடுத்து தலையில் அப்ளே செய்து மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீர் மற்றும் லேசான ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை செய்து வரலாம்.
- சிறிது ஆலிவ் எண்ணெயை இளஞ்சூடாக்கி உச்சந்தலையில் மென்மையாக மசாஜ் செய்யுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு காலையில் எழுந்ததும் கழுவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை செய்வது நல்ல பலனை தரும்.
Comments
Post a Comment