நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகிலேயே காரமான மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்த இளைஞர் - வைரலாகும் வீடியோ

 மூன்று கரோலினா ரீப்பர் மிளகாய்களை 8.72 வினாடிகளில் சாப்பிட்டு சாதனை படைத்துள்ளார். கரோலினா ரீப்பர் மிளகாய்களை இளைஞர் சாப்பிடும் வீடியோவை கின்னஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.


பொதுவாக நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் காரம் சரியான அளவில் இருக்கும். காரம் அதிகம் சேர்த்துக்கொள்ளாதவர்கள் சற்று காரம் அதிகமான உணவை எடுத்துக்கொண்டால், அவர்கள் கண்களிலிருந்து ரத்த கண்ணீர் வருவதைப் போன்று உணர்வார்கள்.

சிலர் உணவில் அதிகப்படியான காரத்தைச் சேர்த்துக்கொள்வார்கள், சாதத்தில் பெப்பர் கலந்து உண்ணும் பழக்கம் கூட கார விரும்பிகளிடம் காணப்படும்.

அந்த வகையில் உலகின் மிக காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை சாப்பிட்டு கிரெக் ஃபோஸ்டர் என்பவர் கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

மூன்று கரோலினா ரீப்பர் மிளகாய்களை 8.72 வினாடிகளில் சாப்பிட்டு சாதனை படைத்துள்ளார். கரோலினா ரீப்பர் மிளகாய்களை இளைஞர் சாப்பிடும் வீடியோவை கின்னஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

நம் உணவில் உள்ள காரத்தை ஸ்கோவில் ஹீட் யூனிட்கள் (SHU) என்ற அலகில் மதிப்பிடுவார்கள். அதன்படி கரோலினா ரீப்பர் மிளகாய் ஒன்றில் உள்ள காரத்தின் அளவு 16,41,183 ஆகும். உலகிலேயே இதுதான் காரமான மிளகாய் என்று சொல்லப்படுகிறது.

மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைப்பது கிரெக் ஃபாஸ்டருக்கு இது முதல் முறையல்ல. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிமிடத்தில் 120 கிராம் கரோலினா ரீப்பர் மிளகாய் சாப்பிட்டு கின்னஸ் சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். இந்த சாதனை தற்போது வரை முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



ALSO READ : திருமணம் ஆன இளம் தம்பதி 3 நாட்களுக்கு கழிவறைக்கு செல்ல தடை; வினோத நடைமுறை ...........

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!