நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடலில் ஏற்படும் 10 வகையான நோய்களை விரட்ட இதோ சில எளிய இயற்கை வைத்தியங்கள்!

 உடலில் ஏற்படும் 10 வகையான நோய்களை விரட்ட சில இயற்கை வைத்தியங்களை இங்கே பார்ப்போம். 

  • தேங்காய் எண்ணையில் சிறிதளவு கற்பூரம் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து அவை ஆறியதும் நெஞ்சில் தடவ நெஞ்சி சளி குணமாகும்.

  • 10 துளசி இலை, சிறுதுண்டு சுக்கு மற்றும் 2 லவங்கம் ஆகியவற்றை நன்கு அரைத்து நெற்றியில் பற்றாக போட்டால் தலைவலி குணமாகும்.

  • சுக்கு, வெள்ளை மிளகு மற்றும் திப்பிலி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

  • நெல்லிக்காயை இடித்து சாறு எடுத்து தேனில் கலந்து சாப்பிட தொடர் விக்கல் குணமாகும்.

  • சட்டியில் படிகாரத்தை போட்டு நன்கு காய்ச்சி, ஆறவைத்து தினமும் மூன்று வேலை சாப்பிட வாய் நாற்றம் குணமாகும்.

  • கரும்பு சக்கையை எரித்து சாம்பல் எடுத்து அதை வெண்ணையில் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு பிரட்சனைகள் குணமாகும்.

  • ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பில்லை, இஞ்சி மற்றும் சீரகம் ஆகியவற்றை நன்கு கொதிக்க வைத்து, ஆறியதும் வடிகட்டி குடிக்க செரிமானம் நன்கு அடையும்.

  • மஞ்சளை அனலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். பின்பு அந்த சாம்பலை தேனில் கலந்து சாப்பிட குடல் புண் குணமாகும்.

  • வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து, தேனில் கலந்து சாப்பிட வயிற்று வலி குணமாகும்.  

  • செம்பருத்தி இலையை காய வைத்து பொடி செய்து தினமும் சாப்பிட மலச்சிக்கல் குணமாகும். 




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!